ஒரு காலத்தில் கோவில் திருவிழாக்களில் இருந்து அனைத்து பக்தி சார்ந்த நிகழ்வுகளிலும் இந்த பாடல்களை கேட்டு இருப்பீர்கள். மார்கழி மாத காலை பஜனையில் புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே பாடலை எங்கோ ஒரு கோவிலில் காற்றலைகளில் தவழ்ந்து வருவதை கேட்டு இருப்பிங்க. அதே போல் ஆயர்பாடி மாளிகையில் பாடலையும் கேட்டு இருப்பீர்கள்.
இதெல்லாம் ஏதோ சினிமாவில் வந்த பக்தி பாடல் என்றே பலரும் சிறுவயது முதல் நினைத்திருப்பார்கள் ஆனால் இப்பாடல் அனைத்தும் மறைந்த அய்யா எம்.எஸ்.வி அந்த காலத்திலேயே போட்ட பக்தி ஆல்பம்.
இந்த பாடல்களைதான் சினிமா பக்தி பாடல் என பலரும் கேட்டு வந்தார்கள்.1977ல் வெளிவந்த இந்த ஆல்பத்தில் எஸ்.பி.பி, டி.எம்.எஸ், ஜானகி,சுசீலா, எல்.ஆர் ஈஸ்வரி, வீரமணி ராஜூ என பிரபலமான பாடகர்கள் பாடி இருந்தார்கள். சினிமா பக்தி பாடல் என்றே இதை பலரும் நினைத்து வருகிறார்கள்.
இதில் இடம்பெற்ற ஆயர்பாடி மாளிகையில், கோதையின் திருப்பாவை, குருவாயூருக்கு வாருங்கள், கோகுலத்துபசுக்கள் எல்லாம், புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ஹிட் அடித்த பாடல் ஆகும். ஆல்பமும் நல்ல விற்பனையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதி இருந்தார்.

