இளையராஜா இசையில் எண்ணற்ற பாடகர்கள் பாடல் பாடி இருக்கிறார்கள், அவர்களில் ஒருவர் இந்த கல்யாண். இந்த கல்யாண் இளையராஜா இசை மட்டுமல்லாது எண்ணற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடல் பாடி இருக்கிறார் என்பதை பார்த்து விடுவோம்.
டி.ஆர் தன் படங்களை தாண்டி சில படங்களுக்கு இசையமைத்தார், அப்படியாக அப்போது உச்சத்தில் இருந்த மோகன் நடிப்பில் வெளிவந்த கிளிஞ்சல்கள் படத்தில் ஒரு கலக்கல் டிஸ்கோ டைப் பாடல்களை வைத்திருந்தார், அந்த பாடல் விழிகள் மேடையாம் என்ற பாடல், அந்த பாடலில் ஜூலி ஐ லவ் யூ என்ற ஒரு வார்த்தை மட்டும் திரும்ப திரும்ப வரும், பாபம் பாபம் ஜூலி ஐ லவ் யூ என்று பாடியது டாக்டர் கல்யாண் தான்.
புதுவசந்தம் படத்தில் வரும் ஆயிரம் திருநாள் பாடலில் ஹே ஹே ஹேய் என்று பாடுவதும் டாக்டர் கல்யாண் தான். இளையராஜா இசையில் காளி, ஆராதனை பட பாடல்களை பாடியுள்ளார்.
மனோஜ்கியானின் வெளிச்சம், வி.எஸ் நரசிம்மனின் புதியவன் உள்ளிட்ட படங்களில் இவர் பாடியுள்ளார். அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட இவர் அங்கு மயக்கவியல் மருத்துவராக பணியாற்றி வருகிறார், இசைக்குழுவும் நடத்துகிறார்.









