---Advertisement---

சிறந்த நடிகர் சார்லி- இவரின் பின்னணி

Published on: September 15, 2025
---Advertisement---

சார்லி தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சார்ந்தவர், 1982ல் வந்த லாட்டரி டிக்கெட் படத்தின் மூலம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர், தொடர்ந்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார் இவர்.

 

காமெடியாக இவர் நடித்து பல படங்கள் வந்திருந்தாலும், எல்லாம் சின்ன சின்ன வேடங்கள்தான், இயக்குனர் பாஸில், இயக்குனர் விக்ரமன் போன்றோர்தான் சார்லியை சரியாக தமிழ் சினிமாவில் பயன்படுத்திகொண்டவர்கள். இயக்குனர் பாஸிலின் படத்தில் ஏதாவது ஒரு சின்ன வேடத்துலயாவது சார்லி வந்திடுவார். அது போல் விக்ரமனின் புது வசந்தம், பூவே உனக்காக, உன்னை நினைத்து மூன்று படங்களும் சார்லி பெயரை சொன்ன உடனே நியாபகம் வரும் படங்கள் ஆகும்.

திரையுலகில் படிக்க பிடிக்காமல் ஊரை விட்டு ஓடி வந்து நடிகராகும் பலர் மத்தியில் சார்லி பல டிகிரி வாங்கிய பட்டதாரி, பி,ஹெச்டியும் முடித்துள்ளார்.

இவர் பல திரைப்படங்களில் காமெடியில் நடித்து இருந்தாலும், வெளிநாடு செல்ல முடியவில்லையே என்ற  அந்த ஏக்கத்துடன் நடித்த வெற்றிக்கொடி கட்டு திரைப்படம் சிறந்த குணச்சித்திர நடிப்புக்கு எடுத்துக்காட்டு, மேலும் மாநகரம், கிருமி போன்ற படங்களும் அவரின் நடிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டு கொண்ட படங்கள் ஆகும். மேலும் விவேக் நடிப்பில் அவர் நாயகனாக நடித்து வெளிவந்த வெள்ளை பூக்கள் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் இவர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.