ஆணுக்கு பெண் சளைத்தவரில்லை என்ற அடிப்படையில் பல வருடங்களாக பெண்கள் பல துறைகளில் சாதித்து வருகின்றனர். அந்த வரிசையில் அவர்கள் சினிமா துறையையும் பெண்கள் விட்டு வைக்கவில்லை, அப்படியாக மறைந்த தயாரிப்பாளர் இயக்குனர் பி.ஆர் பந்துலுவின் மகளான விஜயலட்சுமி ஒளிப்பதிவாளராக பாக்யராஜின் சின்ன வீடு உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்தார்.

அதன் பின் பல படங்களில் பணியாற்றிவிட்டு பின்னாட்களில் இயக்குனராகவும் களம் இறங்கினார், அப்படியாக விஜயலட்சுமி இயக்கிய படம்தான் பாட்டு பாடவா.
படத்தின் தலைப்புகேற்ப படத்தின் பாடல்கள் அனைத்தையும் அனைவரும் பாடிக்களிக்கும் வகையில் இருந்தது. எஸ்.பி.பி , ரகுமான், லாவண்யா என அனைவரும் சிறப்பாக நடித்து இருந்தனர்.
இப்படத்தில் இடம் பெற்ற இனிய கானம், வழி விடு வழி விடு, பூங்காற்றிலே ஒரு, சின்னகண்மணிக்குள்ளே என இது போல் 7 பாடல்கள் இருந்தன, அனைத்தும் தித்திக்கும் முத்து என சொல்லலாம். இயக்குனராக இப்படம் பி.ஆர் விஜயலட்சுமிக்கு கை கொடுத்ததா என தெரியாது ஆனால் சராசரியாக ஓடிய படம்தான். எஸ்.பி.பி இப்படத்தில் பைத்தியம் பிடித்த நபர் போல் நடித்திருப்பார். இப்படத்தின் கதை வித்யாசமான காதல் கதைதான். பாடல்கள் இப்படத்தினை பற்றிய ஞாபகங்களை இன்றளவும் வைத்துள்ளன.







