பிளாக் அண்ட் வொயிட் காலங்களில் இருந்து நடித்து வந்தவர் நடிகர் தேங்காய் சீனிவாசன். எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் என அனைத்து நடிகர்கள் அனைவருடனும் இணைந்து காமெடி செய்து நடித்திருப்பார்.
எண்பதுகளில் ஆரம்பத்தில் ரஜினி கமல் போன்ற நடிகர்கள் உடனும் இணைந்து இவர் நடித்திருப்பார்.

எல்லோருக்கும் வரும் படம் தயாரிக்கும் ஆசை இவருக்கும் வந்தது. அப்படியாக எண்பதுகளில் எந்தப் படத்தை தொட்டாலும் வெற்றி என்ற வகையில் நடித்துக் கொண்டிருந்த மோகனின் கால் சீட் இவருக்கு கிடைத்தது, அதை வைத்து இவர் கிருஷ்ணன் வந்தான் என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
இயக்குனர் விஜயன் இயக்கிய இந்த திரைப்படம் மோகனுக்கும் பெரிய தோல்வியை கொடுத்தது. அதே நேரத்தில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் தேங்காய் சீனிவாசனுக்கு மிகப்பெரிய அடியை கொடுத்தது. இந்த படத்தில் ஒரே ஆறுதல் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமே. மிகப்பெரிய ஜாம்பவானாக இருந்த நடிகர் சிவாஜி கணேசன்,மோகன் போன்றோர் நடித்திருந்துமே இப்படம் பெரிய வெற்றியை பெற தவறியது.
இதனால் இவர் பலத்த நஷ்டத்திற்கு உள்ளானார் நிறைய கடன்கள் இவரை சூழ்ந்தது. இருப்பினும் இவரது நண்பரும் அப்போதைய முதல்வராக இருந்த எம் ஜி ஆர் அவர்கள் இவரை நேரில் அழைத்து இவருக்கு தேவையான உதவிகளை செய்தார். இந்த நேரத்தில் இவருடைய உறவினர் வீட்டு நிகழ்வுக்காக பெங்களூர் சென்று இருந்த போது திடீரென உடல் நல கோளாறு ஏற்பட்டு தேங்காய் சீனிவாசன் மரணம் அடைந்தார்.
கிருஷ்ணன் வந்தான் திரைப்படம் வெளிவந்து சில மாதங்களிலேயே அதாவது 1987-ல் இவர் மரணம் அடைந்தார்.







