அந்தக்காலங்களில் வெளிவந்த படங்கள் எல்லாம் வித்யாசமான கதைகளை கொண்டவை, கதைகளில் கடல் ஆழத்தை விட அதிக ஆழம் இருக்கும் ஏனென்றால் அது போல் கதைகளைத்தான் எழுதி படமாக்கி வந்தார்கள்.

இப்ப உள்ள குழந்தைகள் எல்லாம் அப்பா அம்மாவிடம் தூங்கும்போது கதை கேட்பதில்லை, ரீல்ஸ், ஷார்ட்ஸ் பார்க்கும் தலைமுறையாக இன்றைய தலைமுறை போய்விட்டது.
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம், அந்த நாட்டு ராஜா ஒரு ஆபத்துல சிக்கிக்கிட்டாராம் , இப்படிலாம் சின்ன வயசுல கதை கேட்குறப்போ அதுல சொல்லப்படுற விசயங்கள் கற்பனை கலந்து சொல்லப்படுற மாயாஜலத்தனமான விசயங்கள் எல்லாம் பிரமிப்பை உண்டாக்கி செல்லும், அதையெல்லாம் சினிமாவாக பார்க்கும்போது மிகுந்த பிரமிப்பை உண்டாக்கும்.
அப்படியொரு கதைதான் பிரபல இயக்குனரும் மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபருமான சுந்தரம் தயாரித்து இயக்கிய ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி.பாரதிதாசன் வசனம் எழுதிய படம் இது.
அபூர்வ சிந்தாமணியாக எம்.ஜி ஆரின் மனைவி வி.என் ஜானகி நடித்திருந்தார், மந்திரவாதி ஒருவரின் கட்டுப்பாட்டில் சிக்கிய ஒரு அரசகுமாரி, தன்னை பெண் பார்க்க வரும் ஒவ்வொரு நபரிடமும் சில கேள்விகளை கேட்டு அதற்கு சரியான பதில் சொன்னால் மணந்து கொள்வேன் எனவும் தவறாக பதில் சொன்னால் தலை தரையில் வீழ்த்தப்படும் என சொல்ல பலர் ராஜகுமாரியை மணந்து கொள்ளும் ஆர்வத்தில் வந்து தங்கள் இன்னுயிரை இழக்கின்றனர். இதற்கு பின் மந்திரவாதியின் சூழ்ச்சி உள்ளது, அவனின் கொள்கைப்படி 1000 பேரை போட்டுத்தள்ளினால் அவனுக்கு அளப்பரிய சக்தி கிடைக்கும் என்பதை நம்பி ராஜகுமாரியை வசியப்படுத்தி இப்படி செய்ய வைக்கிறான். கடைசியில் ஆயிரம் பேரில் ஒருவராக வரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நபர்களின் சார்பில் வரும் இளைஞர் அதை முறியடிக்கிறார். பயங்கர சஸ்பென்ஸாக த்ரில்லிங்காக எடுக்கப்பட்டு அந்த காலத்தில் வெற்றிபெற்ற படம் இது. ஜி. ராமநாதனின் இசையில் 15 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன.
இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிபெற்றது.







