கலக்கப்போவது யார் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. காரைக்காலைச் சேர்ந்த இவர், தனக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் சிறு தொகையை கூட தான் வைத்துக் கொள்ளாமல் ஏழைகளுக்கு கஷ்டப்படுபவர்களுக்கு மருத்துவ உதவி வேண்டும் என கேட்பவர்களுக்கு உதவி செய்து வந்தார்.
மேலும் மிகப் பெரிய அளவில் பல கோடிகள் தேவைப்படும் நபர்களுக்கு மருத்துவ உதவிக்கு தனக்கு கிடைத்த புகழ் மூலம் பெரிய பெரிய நடிகர்களிடம், விஐபிகள் இடம் கேட்டும் வாங்கி அந்த பணத்தை அவர்களுக்கு கொடுத்து வந்தார்.
இதன்மூலம் அவர் மிகப்பெரிய அளவு புகழடைந்தார் இந்நிலையில் அவரை வைத்து ஹீரோவாக வைத்து படம் எடுக்க வேண்டும் என பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர். அதனால் ஷெரிப் என்பவர் இயக்கத்தில் காந்தி கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக இவர் நடித்து வந்தார் இப்படத்தில் இவருக்கு இணையாக இயக்குனர் பாலாஜி சக்திவேல் நடித்துள்ளார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராசி திரைப்படத்துடன் கே பி ஒய் பாலாவின் காந்தி கணக்கு திரைப்படமும் வெளியாகிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாலா, சிவா அண்ணனுக்கு போட்டியாக இப்படத்தை ஒரே நாளில் வெளியிடவில்லை சிவா அண்ணன் படத்துக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் ஒரு நாலு பேர் இந்த படத்தை பார்த்தால் இந்த படமும் வெற்றி பெறும் அல்லவா அதனால் தான் அந்த தேதியில் நாங்கள் வைத்திருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.
பாலாவின் படத்தை நாம் ஒரு முறை பார்த்தால் கண்டிப்பாக அது அவருக்கு பெரிய திருப்பு மனை கொடுக்கும். இதன் மூலம் அவர் பல்வேறு புகழை அடைந்து இன்னும் நிறைய ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது.








