---Advertisement---

டிஜிட்டலில் சேதுபதி ஐபிஎஸ் வந்தால் எப்படி இருக்கும்.

Published on: August 25, 2025
---Advertisement---

சமீபத்தில் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ ரிலீசாக வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சில வருடம் முன் கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகி ஓடியது, அது போல கேப்டன் பிரபாகரனும் வெற்றிப்படமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

சில நேரங்களில் திரைப்படத்துறையில் ஒரே மாதிரியான பேய்ப்படம், நகைச்சுவை படம், கேங்ஸ்டர் படம் என ட்ரெண்டிங்கில் ஓடிக்கொண்டிருக்கும், அது போல இந்த 80ஸ், 90ஸ் படங்கள் ரீ ரிலிஸ் ஆகி ட்ரெண்டிங்கில் ஓடினால் நன்றாக இருக்கும். ஏனென்றால் பழைய படங்கள் போல இப்போது உள்ள படங்கள் கிடையாது, தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் , ரத்தம், சதை, வெறி, துப்பாக்கி என எந்த கதைக்கும் முக்கியத்துவம் இல்லாமல் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் கேப்டன் பிரபாகரன் வெளியானதை தொடர்ந்து சில நாட்களில் உயிருள்ளவரை உஷா திரைப்படத்தை டி. ஆர் டிஜிட்டலில் வெளியிட இருக்கிறார், அதன் பின்பு எங்க வீட்டு வேலன் வர இருக்கிறதாம். இப்படி வரிசையாக ரீ ரிலீஸ் படங்களாக பழைய படங்கள் வெளிவரவேண்டும்.

ரீ ரிலீஸ் படங்களில் ஹிட் படங்கள் என நீண்ட நாட்கள் ஓடிய பழைய படங்கள் 1 சதவீத படங்கள்தான் ரிலீஸ் ஆகியுள்ளன.

 

விஜயகாந்தை வைத்து பெரும் பொருட்செலவில் ஏவிஎம் நிறுவனத்தால் தயாரித்து  எடுக்கப்பட்ட சேதுபதி ஐபிஎஸ் திரைப்படம் எல்லாம் மீண்டும் டிஜிட்டலில் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.