---Advertisement---

தோத்துட்டா மொதல்ல அதை ஒத்துக்கிடனும…அந்த தைரியம் இருக்கா?…சூரியை பற்றி சொன்ன சசிகுமார்…

Published on: June 15, 2024
sasikumar soori
---Advertisement---

அமீரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் சசிகுமார். “சுப்ரமணியபுரம்” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் இவர்.

அந்த படத்தின் கதாநாயகனும் இவரே. அதன் பிறகு “நாடோடிகள்” , “குட்டிப்புலி” என படம் படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்போதும் வெற்றிகரமான ஹீரோவாகத்தான் இருக்கிறார் தமிழ் சினிமாவில்.

“விடுதலை” படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியவர் சூரி. இவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதன் பின்னர் சமீபத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் “கருடன்” படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்திருக்கிறார். காமெடியன் சூரி ஒரு லெவல் என்றால் ஹீரோ சூரி வேறு ஒரு லெவலாக ஜொலிக்கிறார்.

சூரி, சசிகுமார் நடித்திருக்கும் “கருடன்” படத்தின் சக்சஸ் மீட் நடந்தது.  அதில் பேசிய சசிகுமார் இப்போதெல்லாம் தோல்வி அடைந்த படங்களுக்கு தான் வெற்றி விழா கொண்டாடப்படுகிறது.

உண்மையை சொல்லப்போனால் வெற்றி விழா எடுக்கப்படும் படங்களில் அதிகம் தோல்வியை தழுவியதாகத்தான் இருக்கிறது.

படம் தோல்வி என தெரியவந்தால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் அடுத்த படத்தில் ஜெயிக்க முடியும். அதை விட்டு விட்டு காரணம் தேட கூடாது என சொன்னார்.

karudan
karudan

“கருடன்” படத்தின் சக்சஸ் மீட் என்பதற்கு பதில் நன்றி சொல்லும் விழா என சொன்னால் நன்றாக இருக்கும் என சசிகுமார் கேட்டுக்கொண்டதையடுத்து மேடைக்கு பின்னால் இருந்த எல்.ஈ.டி.

திரையில் நிகழ்ச்சியின் பெயர் மாற்றப்பட்டது. “கருடன்” பட வெற்றிக்கு காரணம் படத்தின் தயாரிப்பாளர் தான் எனவும் சொன்னார் சசிகுமார். அதோடு சூரிக்காக மட்டுமே “கருடன்” படத்தில் நடிக்க தான் ஒத்துக்கொண்டதாக சொல்லியிருந்தார்.

சசிகுமார் படத்தில் தான் நடித்தால் தான், அவர் சூரி படத்தில் நடித்ததாக சொல்வது குறித்து பேசிய சூரி, சசிகுமார் படத்தில் நடித்தது போன்ற ஃபீல் தான் தனக்கு இருந்ததே தவிர, சூரி படத்தில் சசிகுமார் நடித்தது போல இல்லை என சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actress Urvashi talking about legendary Tamil cinema comedian Kumari Muthu and his inspirational life lesson lines.

“அனைவரும் கிண்டல் செய்த அதே கண்கள் தான்…” லெஜண்ட் குமாரி முத்து சொன்ன வார்த்தை… சமீபத்திய பேட்டியில் உருகிய ஊர்வசி!

Actor Sivakarthikeyan and director Venkat Prabhu upcoming film with Sathya Jyothi Films production inside buzz and industry rumors.

சத்யஜோதி நிறுவனத்துடன் திடீர் மோதல்? சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு படம் கைவிடப்பட்டதாகப் பரவும் ஷாக்கிங் வதந்திகள்!

Actor R Madhavan next pan India movie GDN official theatrical release date poster produced by Varghese Moolans Pictures and Tricolour Film.

ஜூலை 17 அன்று தியேட்டர்களில் ஆட்டம் ஆரம்பம்; மாதவனின் மெகா பட்ஜெட் படத்தின் ஓடிடி பார்ட்னர் இவர்தான்!

Thalapathy Vijay and veteran actor Indrans in an iconic sequence from Nanban movie stills.

தளபதி விஜய்யின் படத்தில் அந்த ஒரே ஒரு சீன்; மலையாள நடிகர் ஓப்பனாக உடைத்த பல வருட ரகசியம்!

Hollywood legendary actor and director Clint Eastwood celebrating his 96th birthday with Jigarthanda DoubleX movie references.

96-வது வயதில் காலடி எடுத்து வைக்கும் உலக சினிமா ஜாம்பவான்; ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் காம்போவை கொண்டாடும் ரசிகர்கள்!

Director Gowtham Sivaraman and music director Leon James attending Drama Company Production No 1 movie official launch pooja ceremony.

டிராமா கம்பெனியுடன் இணையும் அபிஷன் ஜீவிந்த்; புதிய இயக்குநரின் பிரம்மாண்ட படத்தில் களம் இறங்கும் 2 டாப் நடிகைகள்!