---Advertisement---

காதலிக்காக ட்ரவுசருடன் வந்த சிவாஜி கணேசன்!…ஒரு வார்த்தை கூட மாறாமல் பேசி வியக்க வைத்த வல்லவர்…

Published on: June 10, 2024
sivaji
---Advertisement---

செவாலியே சிவாஜி கணேசன் தமிழ் சினிமாவிற்கு இவர் கிடைத்தது தமிழ் சினிமா ரசிகர்கள் செய்த பாக்கியம் என்றே தான் சொல்ல வேண்டும். அந்த அளவில் அவர் ஏற்று  நடிக்கும் கதாப்பாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொள்ளும் விதமான நடிகர் என்று தான் சொல்லியாகவேண்டும்.

எந்த கதாப்பாத்திரத்தில் இவர் இதுவரை நடிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்வது சற்று கடினமாகத்தான் இருக்கும் சினிமாவை பற்றி எல்லம் தெரிந்து வைத்திருப்பவர்களால் கூட.

“அந்தமான் காதலி” படத்தின் படப்பிடிப்பிற்காக அந்தமானுக்கு சென்றதாம் படக்குழு. முக்தா சீனிவாசன் தான் படத்தின் இயக்குனர். சுஜாதா கதாநாயகி, சந்திர மோகன், ‘தேங்காய்’ சீனிவாசன் என  பலரும் படத்தில் நடித்திருந்தனர். முக்தா ராமசாமி படத்தை தயாரித்திருந்தார்.

andaman kadhali
andaman kadhali

படத்திற்காக ஒரு முறை மேக்-அப் போடும் போது சிவாஜி டிரவுசர் மட்டுமே அனிந்திருந்தாராம். அந்த நேரத்தில் காட்சியில் அவர் பேச வேண்டிய  வசனங்களை பற்றி சொல்லப்பட்டதாம்.

வசனகர்த்தாவோ, இயக்குனரோ மட்டும் தான் அவரிடம் வசனத்தை பற்றி சொல்வ வேண்டுமாம் அவரிடம் . அதே போல காட்சி ஷூட்டிங்கிற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை கேட்டாராம்.

அது எத்தனை பக்க வசனங்களாக இருந்தாலும் சரி இரண்டு முறை மட்டுமே கேட்டுவிட்டு அதை அப்படியே சொல்வாராம். ஒரு வார்த்தை கூட விடுபடாதாம்,அதே போல ஒரு வசனத்தை கூட மாத்தி சொல்லி விடமாட்டாராம்.

அந்த காட்சிக்கு ஏற்றவாரு வசனத்தை எப்படி சொல்ல வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர். அதுவே அவரது தனித்துவம். தான் சிறு குழந்தையாக இருந்தபோது “அந்தமான் காதலி” படப்பிடிப்பில் இதை எல்லாம் பார்த்து வியந்ததாக மறைந்த இயக்குனர் முக்தா சீனிவாசனின் மகன் சுந்தர் சொல்லியிருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!