---Advertisement---

எங்கடா போன?…கத்திய கண்ணதாசன்!… நீங்க மட்டும் சொல்லாம போகலாமா?…நியாயம் கேட்ட விஸ்வநாதன்…

Published on: June 10, 2024
m.s.v.
---Advertisement---

எம்.எஸ்.விஸ்வநாதன்  –  தமிழ் சினிமா வரலாற்றில் எந்த காலத்திலும் அழிக்க முடியாத பெயர். துவக்கத்தில் ராமமூர்த்தியுடன் இணைந்தே இசையமைத்து வந்தவர் பிறகு தனியாளாக பணி செய்ய துவங்கினார். இவரது பாடல்கள் இன்று கேட்டாலும் இனிமையாகத்தான் இருக்கும். “மெல்லிசை மன்னர்” என்ற அடைமொழியை தன் வசப்படுத்தியவர் தனது திறைமையால்.

கண்ணதாசனுடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர். படங்களில் பாடல்களுக்கு இசையமைக்க வந்த பிறகு தான் கண்ணதாசனுக்கு பரீட்சியமானார் எம்.எஸ்.விஸ்வநாதன். இசையால் துவங்கியது இவர்கள் இருவரிடையேயான நட்பு. தன்னை உடன் பிறவா சகோதராராக தான் நினைத்து வந்தார் கண்ணதாசன் எம்.எஸ்.விஸ்வநாதன் சொல்லியிருந்தார்.

msv kannadasan
msv kannadasan

ஒருமுறை தனக்கு உடம்பு சரியில்லாமல் போனதாம். இதனால் தன்னால் 15 நாட்கள் சரியாக செயல்பட முடியாத நிலையில் இருந்து வந்தாராம் விஸ்வநாதன். அந்த நேரத்தில் கண்ணதாசன் எம்.எஸ்.வியை காண தினசரி வந்து விடுவாராம். அதிலும் ஒரு நாள் காலையில் வந்தவர் இரவு வரை விஸ்வ நாதனின் தலைக்கு அருகே அமர்ந்திருந்தாராம்.

அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்தித்து பேசும் பழக்கம் கொண்டவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். நேரில் சந்திக்க முடியாவிட்டால் போனில் பேசிக்கொள்வார்களாம். வேலியயின் காரணமாக இரண்டு நாட்களுக்கு மேல் பேசாமல் இருந்திருக்கிறார் விஸ்வநாதன். அதன் பிறகான சந்திப்பின் போது எங்கடா போன என உரிமையோடு அதட்டினாராம் கவிஞர்.

எங்கே சென்றாலும், விஸ்வநாதனையும் கூடவே கூட்டிச்செல்வதை பழக்கமாக வைத்திருந்தாராம் கண்ணதாசன். ஆனால் மரணத்தில் மட்டும் தன்னை விட்டு விட்டு தனியாக சென்று விட்டார் என் வருத்தத்துடன் சொல்லியிருந்தார் ஒரு முறை.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.