---Advertisement---

காலா கால வச்சி ஆறு வருஷம் முடிஞ்சிபோச்சே!…ரஜினியை வச்சி ரவுசு காட்டிய ரஞ்சித்…

Published on: June 7, 2024
kaalaa
---Advertisement---

இயக்குனர் பா.ரஞ்சித் “அட்டகத்தி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். தினேஷ் கதாநாயகனாக நடித்திருக்க, நந்திதா ஸ்வேதா நடித்திருப்பார், சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தனது படங்களின் கருத்துக்களாக எடுத்து கொண்டு இயக்கி வருபவர் இவர்.

ரஜினியை வைத்து “கபாலி”, “காலா” என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார். “கபாலி” மலேசியாவை களமாக மையமாக வைத்தும், ‘காலா”மும்பையை வைத்தும் படமாக்கபட்டிருக்கும். நானா படேகர் ஹரி தாதாவாக படத்தில் ரஜினியுடன் போட்டி போட்டிக்கொண்டு நடித்திருந்தார்.

ranjith rajini
ranjith rajini

எப்பவும் போல ஸ்டைல் குறையாத ரஜினி, கருப்பு வேஷ்டி, கருப்பு சட்டை, கூலிங் கிளாஸ் என அசத்தலாக வந்திருப்பார். ரஜினிக்கு மனைவியாக ஈஸ்வரி ராவ், முன்னாள் காதலியாக ஹுமா  குரேஷி நடித்திருந்தனர். சமுத்திரக்கனி படத்தில் நடித்து பலம் சேர்த்திருப்பார். சந்தோஷ் நாராயணன் இசையில் படம் வெளிவந்தது.

மும்பை வாழ் தமிழர்களின் உரிமை பிரச்சனையை மையமாக வைத்து கதையை நகர்த்தியிருப்பார் பா.ரஞ்சித். “வேங்க மவன் ஒத்தயில நிக்கேன், தில்லிருந்தா மொத்தமா வாங்கலே” படத்தில் மிக பிரபலமான ரஜினி பேசியிருந்த பஞ்ச் டயலாக். காலா சேட் நா போலாமா? என ரஜினியிடம் பம்மிய ஹரி தாதா நானா படேகர் வசனம் தியேட்டரில் விசில் சத்தத்தை பறக்க விட்டது.

கடந்த 2018ம் வருடம் இதே ஜூன் மாதம் ஏழாம் தேதி தான் “காலா” வெளியானது, மலேசியாவில் மட்டும் முதல் நாளே அதாவது 6ம் தேதியே வெளியானது. “காலா” சினிமாத்திரையில் கால் வைத்து ஆறு ஆண்டுகள் முடிவடைந்து ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ரஜினியை வைத்து ரஞ்சித் காட்டிய ரவுசு ரஜினி ரசிகர்களால் அதிகமாக பேசப்பட்டது அந்த நேரத்தில்.தனுஷ்தான் “காலா”வின் தயாரிப்பாளர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

AGS Entertainment producer Archana Kalpathi clarifying rumors about actor Simbu and director Aswath Marimuthu movie status in a recent interview.

சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படம் டிராப் ஆகிடுச்சா… கிளம்பிய வதந்திகளுக்கு நேர்காணலில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!

Producer KJR Rajesh giving a bold interview about Gen Z crowd backing TVK Vijay, Pradeep Ranganathan, and Blast movie box office success.

“வீட்லதான் உட்காரணும், புதுசுங்க வந்து தூக்கிட்டுப் போயிட்டே இருக்கும்..” பெரிய ஹீரோக்களின் சம்பள திமிரை உடைத்த கேஜேஆர் ராஜேஷ்!

Super Good Films officially announces the theatrical re-release of evergreen classic hit movie Thulladha Manamum Thullum starring Vijay and Simran.

90ஸ் கிட்ஸ்களின் எவர்கிரீன் காவியம்…. மீண்டும் தியேட்டருக்கு வருது தற்போதே கொண்டாட்டத்திற்கு ரெடியான ரசிகர்கள்!!

South Indian actor Dulquer Salmaan launching the first single track Sigma Style from the movie SIGMA today evening.

இன்னைக்கு சாயங்காலம் செம ட்ரீட் இருக்கு…. சிக்மா படத்தோட ஃபர்ஸ்ட் சிங்கிளை ரிலீஸ் செய்யப்போகும் முன்னணி ஸ்டார்!