---Advertisement---

அம்மா ஆகலேன்னா நடிகையே கிடையாது…அடுத்த ரேவதி இவங்கதான்…ஜோஷியம் சொன்ன ஹீரோ…

Published on: June 1, 2024
vani bojhan
---Advertisement---

சின்னத்திரையின் மூலம் பெரியத்திரைக்கு வந்தவர்களின் பட்டியலில் தன்னையும் இணைத்துக்கொண்டார் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்ற பெயர் வாங்கியவர் இவர். தொலைக்காட்சி ஷோக்களில் ஜட்ஜாகவும் இருந்து வருகிறார்.

“அஞ்சாமை” படத்தின் டிரையலர் சமீபத்தில் வெளியானது. நீட் தேர்வு குறித்த கதையை மையமாக கொண்டே தான் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது போல தான் இருக்கிறது. தெருக்கூத்து கலைஞர் போல இருக்கிறது கதாநாயகன் விதார்த்ன் கேரக்டர். விதார்த்க்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருக்கிறார்.

anjaamai
anjaamai

இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருக்கிறார் வாணி. இது குறித்து அவர் பேசியது. அஞ்சாமையில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு தனது கேரியரில் முக்கியமான ஒன்று என சொல்லியிருக்கிறார். இயக்குனரின் அதீத உழைப்பு தான் படம் சிறப்பாக வர உதவியிருக்கிறது என்றார்.

தாய் வேடம் ஏற்று நடிக்காமல் இருந்தால் ஒரு நடிகை திரை வாழ்வு  முழுமை பெறாது. இப்படி ஒரு கதை அம்சம் கொண்ட படத்தில் நடிக்க தன்னை தேர்ந்தெடுத்த படக்குழுவிற்கு தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார் வாணி போஜன்.

 

தொடந்து பேசிய “அஞ்சாமை” பட ஹீரோ விதார்த் படம் சிறப்பாக வந்துள்ளது. உணர்ச்சிபூர்வமான காட்சிகள் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்றார். படத்தில் வந்துள்ள பாடல் தம்மை உணர்ச்சிவசப்பட வைத்ததோடு மட்டுமல்லாமல், அழுகை வர வைத்து விட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.

தனது சிறு வயதில் தன்னை மிகவும் கவர்ந்தவர் நடிகை ரேவதி. வாணி போஜனும் அவரைப்போலவே நடித்திருக்கிறார், அவர் வளர்ந்து நல்லதொரு நிலையை அடைய தனது வாழ்த்துக்களை கூறுவதாகவும் பேசியிருந்தார் விதார்த்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Newlywed couple Vijay Deverakonda and Rashmika Mandanna travelling together to his father's native village Thummanpet to reward 180 merit government school students.

ViRosh Real Heroism: “அப்பா பிறந்த சொந்த ஊருக்கு ரஷ்மிகாவுடன் பயணம்!”… திருமணத்திற்கு பின் விஜய் தேவரகொண்டா எடுத்த மாஸ் முடிவு! 180 ஏழை மாணவர்களின் மொத்தப் படிப்பையும் ஏற்கும் ‘விதே’ தம்பதி! குவியும் பாராட்டு!

Actor Nakkhul and his sister actress Devayani inside an archival family frame reflecting ongoing status updates regarding director Rajakumaran family acceptance.

Emotional Family Bond: “அப்போ தாங்க முடியாத அதிர்ச்சியா இருந்தது!”… அக்கா தேவயானி – ராஜகுமாரன் திருமணம் குறித்து 25 வருடம் கழித்து மௌனம் கலைத்த தம்பி நகுல்! உருக வைக்கும் எமோஷனல் பேட்டி!

Actress Pooja Hegde looking elegant during a recent media interaction while delivering a reality check about social media hype versus box office power.

Box Office Stardom Reality: “30 மில்லியன் ஃபாலோயர்கள் இருந்தாலும் தியேட்டருக்கு வரமாட்டாங்க!”… சோசியல் மீடியா ரசிகர்களின் முகத்திரையைக் கிழித்த பூஜா ஹெக்டே! நெட்டிசன்களை அதிர வைத்த அதிரடிப் பேச்சு!

Director AR Murugadoss sharing his archival marriage ceremony photo featuring late actor politician Captain Vijayakanth and Premalatha blessing the couple.

Captain Nostalgia Touch: “அந்த வரலாற்று நாயகனுடன் என் திருமண நாள்!”… இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஷேர் செய்த அரிய த்ரோபேக் போட்டோ! கேப்டன் விஜயகாந்த் நிகழ்த்திய அந்த திரையுலக பிளாஷ்பேக்!

Actor Sivakarthikeyan posing with director Sivakumar Murugesan and the crew at the rustic shooting location of the movie Seyon.

Rural Action Blast: “அமரன் மேஜிக் மீண்டும் ஆரம்பம்!”… ‘சேயோன்’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து மாஸ் பிக்சர் பகிர்ந்த சிவகார்த்திகேயன்! முதல்கட்ட படப்பிடிப்பு ஓவர்! அக்டோபரில் ரிலீஸ்?

Multi-talented star GV Prakash Kumar posing stylishly on his birthday amid his massive upcoming acting and music composing movie lineups.

Multi-Talent Blast: “ஒரே நேரத்தில் 11 மெகா ப்ராஜெக்ட்ஸ்!”… பிறந்தநாளில் மாஸ் காட்டும் ஜிவி பிரகாஷ் குமார்! நடிப்பிலும் இசையிலும் மிரட்டும் கோலிவுட் கிங்! முழு லிஸ்ட் இதோ!