தமிழ் சினிமா ஆரம்பித்திலிருந்தே இரண்டு நடிகர்கள் முன்னனிகளாக வலம் வருகின்றார்கள். இந்த இருவர் தான் தமிழ் சினிமாவின் போக்கினை முடிவும் செய்வார்கள். எம்.ஜி.ஆர். – சிவாஜி காலத்திலிருந்தேயும் அதற்கு முன்னருமே இது தான் நிலைமை. ஒருவர் புரட்சிகரமான கருத்துக்களை படத்தின் மூலம் சொல்லி மக்களை கவர்ந்தார். இன்னொருவர் தனது ஆற்றல் மிகுந்த நடிப்பால் இதயங்களை தன் வசம் இழுத்தார்.
இதே நிலை தான் ரஜினி-கமல் காலத்திலும். தனது ஸ்டைலால் ரஜினி ரசிக்க வைக்க, நடிப்பில் நுணுக்கங்களை காட்டி கமல் தனக்கான இடத்தை கையகப்படுத்தினார். இவர்கள் இருவருக்கும் அடுத்ததாக இன்றைய தலைமுறையை தன் வசப்படுத்தியிருப்பவர்கள் அஜீத்-விஜய்.
இவர்கள் இருவரும் எத்தனை முறை எங்களுக்குள் தொழில் போட்டி உண்டு. ஆனால் தனிப்பட்ட பகை கிடையாது என அதிர்காரப்பூர்வாக அறிக்கை விட்டாலும் இவர்களின் ரசிகர்கள் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

விஜய் தற்போது நடித்து வரும் “கோட்” படத்தில் அவர் மூன்று விதமான கேரக்டரில் நடிக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. அதே நேரத்தில் அஜீத் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள “குட் பேட் அக்லி” படத்தில் அஜீத்தும் மூன்று விதமான ரோல்களில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
என்னதான் “கோட்” தான் முதல் வெளியாகயிருந்தாலும், அதில் விஜய் மூன்று விதமாக நடிக்கிறார் என்பது அஜீத்தின் பட தகவலுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. ஆனால் இவை இரண்டும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பாக சொல்லப்படவில்லை. இருந்தாலும் இப்போது கசிந்துள்ள செய்தியை கேள்விப்பட்டதுமே வார்த்தை போரை துவக்கிவிட்டனர் இருவரின் வெறி கொண்ட ரசிகர் பட்டாளம்.







