“கோட்” படம் கிட்டத்தட்ட வெளியாகும் தேதி பற்றிய அறிவிப்பினை எதிர்நோக்கியுள்ளது. வெங்கட் பிரபு தனது இந்த படத்தில் கிரிக்கெட் வீரர்கள் இருவரோடு சேர்த்து சிவகார்த்திக்கேயனையும் நடிக்க வைக்க போகிறார் என்ற விஷயம் லீக் ஆனது. இது உண்மையா?, பொய்யா? என்பது படம் திரைக்கும் வந்த பிறகே தெரியவரும்.
படம் பற்றிய அப்டேட்க்காக காத்திருந்த ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக தனது கட்சி பெயரை அறிவித்து அசர வைத்தார். “கோட்” பட பாடலில் கூட மைக்க கையில் எடுக்கட்டுமா? என்ற வரிகள் வேறு அவரது ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைத்தது. சரி “கோட்” எப்படியும் வந்து விடும் சீக்கிரம் என்பது உறுதியாகிவிட்டது. “கில்லி” ரீ-ரிலீஸையே திக்குமுக்காடும் அளவில் கொண்டாடி தீர்த்தவர்கள் தளபதி ரசிகர்கள். அதனால் “கோட்”வெளியாகும் போது கோலாகலம் தான்.

இப்போது எதிர்பார்ப்புக்கள் எல்லாம் ‘விஜய்69’ பற்றி தான். படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற குழப்பமும் நீடித்துக்கொண்டே தான் இருக்கிறது. இயக்குனர் இவர் தான் என்பது சொல்லாமல் சொல்லப்பட்டுவிட்டதாக கருதிக்கொள்ளும் விதமான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறார் ‘வலைப்பேச்சு’ அந்தணன்.
ஹச்.வினோத் தான் இயக்கபோகிறார், படத்தின் திரைக்கதை எழுதத்துவங்கி விட்டாராம் அவர். அதோடு மர்ம முடிச்சு ஒன்றினையும் இப்போதே அவிழ்த்து விட்டுள்ளார் அந்தணன். மக்கள் நலனுக்காக் பாடுபடும் தலைவனாக இதில் விஜயை நடிக்க வைக்க போகிறாராம் வினோத். இது தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டு வரும் நிலையில். இந்த கதை தான் விஜய்க்கு பொருத்தமாக இருக்கும் என அவரது ரசிகர்கள் பேசத்துவங்கியுள்ளார்களாம்.









