“சாமானியன்” படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் ராமராஜன். இவருடைய வெற்றி படங்களை கணக்கிட்டு பார்ப்பது சிறிது கடினமே. அன்றைய காலத்திலேயே இவர் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் போன்றவர்களுக்கு மிகப்பெரிய டஃப் கொடுத்து வந்திருந்தார். இவரது படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் முன்னணிகள் கூட ஒரு நிமிடம் தங்கள் படத்தை விடலாமா?, வேண்டாமா? என யோசிக்கத்தான் செய்திருக்கிறார்கள்.
வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும் தான் சினிமாவில் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு அவரது சினிமா பயணத்தில் பெரிய தொய்வு ஏற்பட்டது. ஆனாலும் அந்த நான்கு ஆண்டுகளில் அவருக்கு கிடைத்த வெற்றிகள் தான் இப்பொழுது வரை அவரை பற்றி பேச வைக்கிறது.
அவரது ஜனரஞ்சகமான நடிப்பும், அவர் தேர்ந்தெடுத்த கதைகள் மட்டுமே அவரது வெற்றிக்கு காரணம் என சொல்லி விட முடியாது. அவைகளை விட முக்கியமான காரணமாக அமைந்தது அவர் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் தான்.

1986 நவம்பர் மாதத்தில் தான் முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானார் ராமராஜன். அதிலிருந்து நான்கு வருடங்கள் மட்டுமே அவர் அதிகமாக நடித்திருக்கிறார். இன்றும் ராமராஜனுக்கென தனி பெயர் உண்டு தமிழ் சினிமாவில். ஆனால் வெறும் நான்கு வருட உழைப்பு மட்டுமே அவரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பெயரையும், புகழையும் பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்த நான்கு ஆண்டுகளில் அவர் நடித்த படங்களில் பெரும்பான்மையானவை வெற்றிப்படங்களே அதிலும் பல வெள்ளி விழா கண்டவை. இந்த தகவல்களையெல்லாம் அவரே சொல்லியிருக்கிறார் ஒரு முறை.







