---Advertisement---

மறுபடியும் துப்பாக்கி கத்தி எல்லாம் கையில எடுக்க மாட்டாங்களா?…இவங்க பிரிஞ்சதுக்கு இது தான் காரணமா?…

Published on: May 6, 2024
vijay armurukadas
---Advertisement---

விஜயை வைத்து தொடர்ச்சியாக வெற்றி படங்கள் கொடுத்தவர் ஏ.ஆர்.முருகதாஸ் “கத்தி”, “துப்பாக்கி”, “சர்க்கார்” என விஜய்யின் பெயரை சொல்ல வைத்த படங்கள் அது. விஜயும், முருகதாஸும் அடுத்து மீண்டும் இணையாமல் போனதுக்கான காரணம் குறித்து சொல்லி இருக்கிறார் ‘வலைப்பேச்சு’அந்தணன்.

‘சன் பிக்சர்ஸ்’ தயாரிப்பில் விஜய்யுடன் ஒரு படத்தில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது வெற்றியாக முடிந்து படத்தின் கதையை சொல்லிவிட்டாராம் முருகதாஸ் விஜயிடம்.

vijay
vijay

முதல் பாதி கதையை கேட்ட விஜய், ஸ்கிரிப்ட் நல்லா இருக்கு என பாராட்டி, இரண்டாவது பாதியில் அவருக்கு சில விஷயங்கள் திருப்திப்பட வில்லையாம் . முருகதாஸிடம் சொல்லி மாற்றி அமைக்க கேட்டிருக்கிறார்.

சில மாற்றங்களை செய்து அதனை விஜயிடம் சொல்ல, அதிலும் திருப்தி அடையாதவர் இன்னும் சில மாற்றங்களை  எதிர்பார்ப்பாக சொல்லியிருக்கிறார். மூன்று பிரம்மாண்ட வெற்றிகளை கொடுத்த பின்பு விஜய்க்கு தன் மீது சரியான நம்பிக்கை இல்லையோ? ஏன் இப்படி மாற்ற சொல்லிக்கொண்டேயிருக்கிறார் என முருகதாஸ் நினைத்ததாக சொன்னார் அந்தணன்.

அதே நேரத்தில் ரஜினியை வைத்து இயக்கிய “தர்பார்” பட பெரிய அளவில் போகாத காரணத்தினாலும் விஜய் சற்று பின் வாங்கினாராம். முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய படமே சரியாக ஓடாத நிலையில் இவரின் இயக்கத்தில் எப்படி நடிப்பது என யோசித்தாராம் விஜய்.

“தர்பார்” படம் எதிர்பார்த்த பலனைத்தராததால் முருகதாஸிடம் பேசிய சம்பளத்தை விஜயை வைத்து எடுக்கப்படவிருந்த படத்தில் குறைப்பது குறித்தும் பேச்சுக்கள் வந்ததாம். இந்த காரணங்களினால் தான் விஜய் முருகதாஸ் இணைய வேண்டிய படம் பேச்சுவார்த்தைக்கு பிறகு அப்படியே ட்ராப் ஆனது என அந்தணன் சொன்னார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Vishnu Vishal talking about the struggles behind the movie Ratsasan.

17 ஹீரோக்கள் நிராகரித்த ‘ராட்சசன்’! நான் வெறும் ‘பேக்கப்’ தானா? மனமுடைந்து பேசிய விஷ்ணு விஷால்!

Dravid Selvam, actor and dialogue writer, working on his upcoming projects.

‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் டபுள் என்ட்ரி! எழுத்தாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டை கலக்கும் ‘டியூட்’ பட புகழ் டிராவிட்

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!