---Advertisement---

என்னது 41ஆ?…நம்பவே முடியலையே!…முத்துப்பாண்டியோட செல்லத்துக்கு பிறந்தநாள் இன்னைக்கு…

Published on: May 4, 2024
trisha
---Advertisement---

“ஜோடி” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் திரிஷா. தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரைக்கு வந்தவர். “மிஸ் சென்னை”பட்டத்தை வென்றவர்.

“ஜோடி”படத்தில் கதாநாயகி சிம்ரனின் தோழியாக சில காட்சிகளில் மட்டுமே வந்திருந்த திரிஷா, பிறகு மெல்ல, மெல்ல கதாநாயகியாக மாறினார். அவரது படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக, அவரை சூழ்ந்து கொண்டனர் தமிழ் ரசிகர்கள்.

trisha
trisha

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே தொடர்ச்சியாக நடித்து சாதனை புரிந்து வருபவர் இவர். சமீபத்தில் விஜயுடன் “லியோ” படத்தில் ஜோடியாக கைகோர்த்திருந்தார். இவரும் விஜயும் நடித்த “கில்லி” திரைப்படம் மெகா ஹிட் ஆனது.

அஜீத்குமாருடன் “மங்காத்தா”, “ஜி” போன்ற படங்களிலும் இவர் நடித்துள்ளார். ரஜினிகாந்துடன் “பேட்ட” படத்திலும், கமல்ஹாசனுடன் “தூங்காவனம்”. “மன்மதன் அம்பு”படங்கலிலும் நடித்திருக்கிறார்.

மென்மையான நடிகையாக பார்க்கப்பட்ட திரிஷா தனுஷின் “கொடி” படத்தில் திடீரென வில்லி அவதாரம் எடுத்தார். வண்ணத்துப்பூச்சியை எதற்கு இப்படி வயலன்ட்டாக மாற்றினார்கள் என அதிர்ச்சி கலந்த பிரம்மிப்போடு  பார்த்தனர்   ரசிகர்கள்.

prakash raj
prakash raj

மணிரத்னம் இயக்கத்தில் “தக்-லைஃப்” படத்தில் கமலுடன்  நடித்து வருகிறார். “கில்லி” படத்தில் முத்துப்பாண்டியாக வந்த பிரகாஷ்ராஜ் இவரை பார்த்து ‘ஹாய் செல்லம்’ என்று சொன்ன டயலாக் தமிழகத்தில் மிக பிரபலமானது. பிரகாஷ்ராஜ் செல்லம் என அழைத்த தமிழ் சினிமாவின் செல்லமான திரிஷாவுக்கு இன்று பிறந்த நாள்.

அவரது பிறந்த தினத்தையொட்டி வலைத்தளங்களின் மூலம் ரசிகர்கள் திரிஷாவுக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர். இன்றும் த்ரிஷா என்ற அந்த மந்திர மூன்றெழுத்து பெயர் மனதை மயக்கி கொண்டு தான் இருக்கிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Vishnu Vishal talking about the struggles behind the movie Ratsasan.

17 ஹீரோக்கள் நிராகரித்த ‘ராட்சசன்’! நான் வெறும் ‘பேக்கப்’ தானா? மனமுடைந்து பேசிய விஷ்ணு விஷால்!

Dravid Selvam, actor and dialogue writer, working on his upcoming projects.

‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் டபுள் என்ட்ரி! எழுத்தாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டை கலக்கும் ‘டியூட்’ பட புகழ் டிராவிட்

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!