---Advertisement---

ஆறு மணிக்கு அலற போகுது கோடம்பாக்கம்?… தலைவர் கவுண்டவுன் ஸ்டார்ட்ஸ்!…

Published on: April 22, 2024
rajini
---Advertisement---

“வேட்டையன்” படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். ‘தலைவர் 171’ படத்தினுடைய எதிர்பார்ப்பு தற்பொழுதே எகிறி உள்ளது.

படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வெளியிடும் “சன் பிக்சர்ஸ்” நிறுவனத்துடன் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்திருப்பது ஒரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

தனக்கென தனி ஒரு ட்ரெண்ட்டை கையில் எடுத்து வித்தியாசமான கதை ஓட்டத்தையும், தெளிவான திரைக்கதையோடு படங்களை கையாளும் லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாலும் எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது.

இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்ததுமே ரஜினி கையில் வாட்சுடன் இருப்பது போல போஸ்டர் ஒன்றும் வெளியானது. இது படத்தை குறித்த  யூகங்களை அதிகரிக்கச்செய்தது.

‘வெயிட்டிங்லேயே வெறியேறுது’என “வேதாளம்” படத்தில் அஜித் பேசும் வசனம் போல தான் ரஜினி ரசிகர்களின் தற்பொழுது இருந்து வருகின்றனர்.

தலைவர்171
தலைவர்171

‘தலைவர் 171’ பற்றிய ஒரு முக்கியமான அப்டேட் இன்று வெளி வருகிறது. படத்தினுடைய பெயரை இன்று ஆறு மணிக்கு வெளியிடப்போவதாக “சன் பிக்சர்ஸ்” நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிருத்திருந்தது…

தனது ஸ்டைலால் சினிமா ஸ்கிரீனை வேட்டையாட காத்திருக்கும் “வேட்டையன்” ஒருபுறம் இருக்க, ‘ரஜினி 171’ படத்தினுடைய பெயர் எதுவாக இருக்கும்? என ஆர்வத்தில் இருந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள்.

படத்தின் பெயர் வந்தால்  கதை  எப்படி இருக்கும்  சற்று கணிக்கலாம்  என்ற ஆசையிலும், “ஜெயிலர்”க்கு பிறகு மீண்டும் பழைய நிலைக்கு வந்துள்ள ரஜினியின் மார்க்கெட்டும் ‘தலைவர் 171’ அப்டேட்டின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கின்றது.

பட்டாசு, இனிப்பும் கையுமாக வலம் வரக்காத்திருக்கும் ரசிகர்கள் ஒரு புறத்திலும், வலைதளத்தை தெறிக்கவிடவும் தயாராகி வருகின்றனர். எப்படியோ இன்று பெரிய ‘ட்ரெண்டிங்’ விருந்து காத்திருக்கிறது…

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Music maestro Ilaiyaraaja composing for the upcoming movie Valmiki Ramayana directed by Bhavna Talwar.

Valmiki Ramayana : “ராமாயணத்திற்கு இசையமைக்கும் இசைஞானி” – இளையராஜா – ஆனந்த் நீலகண்டன் கூட்டணியில் புதிய காவியம்; ரிலீஸ் எப்போது?

Actor Salman Khan and Director Vamshi Paidipally at the official pooja ceremony of their new film produced by SVC.

Salman – Vamshi : “சல்மான் கான் – வம்சி பைடிபள்ளி கூட்டணியில் மெகா புராஜெக்ட்” – மும்பையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பு!

Music composer Sai Abhyankkar and actress Kayadu Lohar in a still from Pavalamalli song celebrating 100 million views.

Pavazha Malli Record : “10 கோடி இதயங்களை வென்ற பவழமல்லி” – யூடியூபில் மெகா சாதனை படைத்த சாய் அபியங்கர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Official poster of Thalapathy Vijay's Jana Nayagan movie with KVN Productions logo.

Jana Nayagan Update : “ஏப்ரல் 30-ல் ஜன நாயகன் வருகிறாரா?” – சென்சார் போர்டுக்கு செல்லும் விஜய் படம்; விநியோகஸ்தர்களைச் சந்திக்க சென்னை வரும் தயாரிப்பு நிறுவனம்!

Superstar Rajinikanth and Director Nelson Dilipkumar at the Jailer 2 wrap-up party with actor Vasanth Ravi.

Jailer 2 Update : “13 மாத காத்திருப்பு முடிந்தது” – ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு; பிளாஷ்பேக் காட்சியில் வசந்த் ரவி? நெல்சன் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Bodyguard Nayeem Moosa holding Actor Vijay's hand in a viral social media post about TVK movement.

TVK Movement : “நாளை தமிழகத்தின் இதயங்களை ஆள்வார்” – விஜய்யின் கையைப் பிடித்து மெய்க்காப்பாளர் போட்ட உருக்கமான பதிவு; வைரலாகும் புகைப்படம்!