---Advertisement---

சைத்தானை சன்டைக்கிழுத்த ப்ளூசட்டை மாறன்!…அட்வைஸ் கொடுத்த விஜய் ஆண்டனி?…

Published on: April 20, 2024
maran vijay antony
---Advertisement---

இசையமைப்பளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இசையால் பிரபலமடைந்த இவர் பின்னர் ஹீரோ அவதாரம் எடுத்தார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து, தரமான படங்களை தமிழ் ரசிகர்களுக்கு கொடுத்தும் வருகிறார் தொடரச்சியாக.

நல்ல அழுத்தமான கதைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் இவர், தனது  படங்களுக்கென தனி ரசிகர் கூட்டத்தையும் சேர்த்துள்ளார். இவர் நடித்த “சலீம்”, “பிச்சைக்காரன்”, “சைத்தான்” போன்ற படங்கள் நல்ல முடிவுகளை பெற்றுத்தந்தது.

romeo
romeo

தற்பொழுது இவர் நடித்து வெளிவந்துள்ள படம் “ரோமியோ”.
தமிழ் படங்கள் வெளிவந்தாலே போதும் தனக்கே உரிய பாணியில் விமர்சனத்தை கொடுத்து கோலிவுட்டையே பரபரப்பாக்கி விடுவார் விமர்சகர் ‘ப்ளூ சட்டை’மாறன்.

அவரது ஸ்டைலிலேயே “ரோமியோ”படத்திற்கு விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது விஜய் ஆண்டனிக்கு சற்று நெருடலாகவே இருந்தது போல. “பல நல்ல படங்களை விமர்சித்து கொல்லும் திரு.புளூ சட்டை மாறன் போன்ற சிலருக்கு, இவங்க சொல்றதையெல்லாம் நம்பி, ‘ரோமியோ’ போன்ற பல நல்ல படங்களை கொண்டாடாமல்”.

“தமிழ் சினிமாவை குறை சொல்லும் அறிவு ஜீவிகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என் அன்பு மக்களே “ரோமியோ” ஒரு நல்ல படம் போய் பாருங்க புரியும்” என மாறானின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சினிமா ரசிகர்களே, தரம்  தாழ்ந்த விமர்சகரும், விஷக்கிருமியுமான ப்ளூ சட்டையின் ‘ரோமியோ’ ரிவியூவை புறக்கணிப்பீர். அலைகடலென திரண்டு ‘ரோமியோ’ ஓடும் தியேட்டர்களை நிரப்புங்கள். இப்படிக்கு தற்போதைக்கு திருந்திய ப்ளூ சட்டை என தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மாறன்.

இவர்கள் இருவருக்கும் வார்த்தை போர் உருவாகி கோலிவுட்டையே பரபரப்பாக்க, படத்திற்கு இப்படியே இருவரும் நல்ல விளம்பரத்தை தேடிக்கொள்கிறார்கள் என நெட்டிசன்கள் கலாய்க்க துவங்கியுள்ளனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional compilation banner featuring actor Ravi Mohan's upcoming movie projects.

ரவி மோகனின் மிரட்டலான சினிமா லைன்அப்: அடுத்தடுத்து வெளியாகும் மாஸ் படங்கள் – முழு விவரம்!

File photo of director Ganesh K Babu and actor Ravi Mohan for Karathey Babu.

ரஜினிகாந்திற்காக எழுதப்பட்ட கதை: ரவி மோகனுக்காக மாறிய ‘கராத்தே பாபு’ – சுவாரஸ்யமான தகவல்!

Official production update banner for Sivakarthikeyan's upcoming film Seyon.

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படத்தின் முக்கிய அப்டேட்: விறுவிறுப்பாக முடிந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Official teaser launch banner for the thriller film Dhik Dhik Dhik.

ரகசியமும் ஆபத்தும் நிறைந்த ‘திக் திக் திக்’ டீசர்: நடிகர் ஆர்யா வெளியிட்ட மிரட்டலான வீடியோ!

Official trailer release announcement banner for Hiphop Tamizha's Meesaya Murukku 2.

ஹிப்ஹாப் தமிழாவின் ‘மீசைய முறுக்கு 2’ டிரெய்லர் அப்டேட்: செப்டம்பர் 25-ல் ரிலீசாகும் படத்தின் டிரெய்லர் நாளை வெளியீடு!

soori-salary-ravikumar-movie

சூரியின் அடுத்த பட சம்பளம் 25 கோடியா? ரவிகுமார் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம்!