---Advertisement---

மீண்டும் சக்தி செளந்தர்ராஜனுடன் இணையும் ஆர்யா

Published on: July 31, 2021
---Advertisement---

சக்தி செளந்தர்ராஜன் இயக்கிய படங்கள் எல்லாமே வித்தியாசமான கதையம்சத்துடன் இருக்கும் அவரின் நாணயம், நாய்கள் ஜாக்கிரதை டிக் டிக் டிக், மிருதன், டெடி என எல்லா படங்களுமே வித்தியாசமான கதையமைப்பை கொண்டவை.

இதில் சமீபத்தில் டெடி திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ஆர்யா –  சக்தி சௌந்தர் ராஜன் ஆகியோர் மீண்டும் புதிய படத்திற்காக இணைகின்றனர்.  இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.  அதேபோல் படத்தில் பணிபுரியும் தொழில்நுட்பக் கலைஞர்களை இறுதி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகிறது. அதை முடித்துக்கொண்டு விரைவில் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர்.
இந்தப் படத்தை ஆர்யா தயாரித்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.