---Advertisement---

சித்ராவின் கணவர் ஹேம்நாத் வேறு வழக்கில் கைது

Published on: January 6, 2021
---Advertisement---

கடந்த மாதம் சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டார். முதல் நாள் வரை அனைவருடனும் சகஜமாக பணியாற்றிய சித்ரா கடந்த டிசம்பர் 9ல் நசரத்பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த தற்கொலையில் பல மர்மங்கள் உள்ளதாக சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு தற்போது நடந்து வரும் நிலையில் ஹேமந்த் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரபல மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் சீட் வாங்கித் தருவதாக கூறி, சென்னை திருமங்கலத்தை சேர்ந்த ஆஷா மனோகரன் என்பவரிடம் ஹேம்நாத் கடந்த 2015-ம் ஆண்டு ரூ.1.05 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக ஜெ.ஜெ. நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர், இந்த வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற் றப்பட்டது. அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, புகார்தாரரான ஆஷா மனோகரனிடம் விசாரித்தனர்.

பிறகு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹேம் நாத்தை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்தனர்.

இதேபோல, மேலும் 2 பேரிடம் அவர் மோசடி செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.