---Advertisement---

வில்லன் ஜெயிக்க ஹீரோ தோற்க- வித்யாசமான கதையமைப்பில் வந்த த்ரில் படம்

Published on: September 12, 2025
---Advertisement---

மணிவண்ணன் அவர்களுக்கு சஸ்பென்ஸ் படங்களை இயக்க சொல்லிக்கொடுக்க வேண்டியதில்லை, பல ஆங்கில நாவல்களை கலந்து ஒரு திரைக்கதை அமைத்து அதை பிரமாத படமாக கொடுத்து விடுவார்.

hq720

எல்லா பெண்களிடம் தவறான துஷ்பிரயோகங்கள் செய்து தனது ஆசைக்கு கட்டுப்படவில்லை என்றால் ,அவர்களை பலவந்தப்படுத்தி கட்டுப்படவைத்து இறுதியில் அவர்களின் கதையை முடித்து விடும் எக்ஸ் டபிள்யூ ராமரத்தினம் என்ற கதாபாத்திரத்தில் சத்யராஜ்.

 

பல பெண்களை இவர் இப்படி செய்ய, ஹீரோ மோகனின் மனைவியான நளினியும் இவரால் பாதிக்கப்பட்டு உயிர் துறக்கிறார், எதிர்த்து கேள்வி கேட்கும் மோகனையும் வீண் பழி சுமத்தி கைதியாக மாற்றி ஜெயிலுக்கு அனுப்ப, ஜெயிலில் இருந்து தப்பி நல்லவன் போர்வையில் வாழ்ந்து வரும் வில்லன் சத்யராஜை ஒழித்து கட்ட மோகன் தொடர்ந்து முயற்சி செய்கிறார், அதுவும் 24 மணி நேரத்திற்குள் பல கட்ட முயற்சிகள் செய்ய, இறுதி முயற்சியே வெற்றி பெறுகிறது.

 

இதில் நாயகனை தொடர் தோல்வியடைய செய்து படம் பார்க்கும் மக்களை என்னடா இவர் இப்படி தோற்கிறாரே என நம்மை எரிச்சலடைய வைத்தார் க்ளைமாக்ஸில் இளையராஜாவின் அதிரடி பிஜிஎம்மோடு சத்யராஜை மோகன் வீழ்த்த படம் முடியும், வில்லனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஹீரோவை கடைசியில்தான் ஜெயிக்க வைத்தார் மணிவண்ணன் இப்படத்தில்.

 

இப்படத்தில் இளையராஜாவின் அதிரடி சஸ்பென்ஸ் பிஜிஎம் கலக்கலாக இருந்தது, அது படத்தின் பலமாக இருந்தது.