Connect with us

உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம்… கனடா நிறுவனம் கண்டுபிடிப்பு…!

World News

உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம்… கனடா நிறுவனம் கண்டுபிடிப்பு…!

உலகில் இரண்டாவது மிகப்பெரிய வைரம் போர்ட்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கின்றது. கனடா நிறுவனமான லுக்காரா டைமண்ட் என்று நிறுவனத்திற்கு சொந்தமான சுரங்கத்தில் 2,492 கேரட் வைரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1905 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 கேரட் கல்லின் வைரத்திற்கு பிறகு தற்போது கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய வைரம் இதுவாகும்.

போர்ட்வானாவின் தலைநகரமான கபோரோனுக்கு வடக்கே சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கரோ என்கின்ற சுரங்கத்தில் தான் இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது. கடந்த 2019 ஆம் ஆண்டில் கரோவே சுரங்கத்தில் 1,758 கேரட் செவேலோ வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வைரம் பிரெஞ்சு பேஷன் ஹவுஸ் லூயிஸ் உய்ட்டன் வாங்கியிருந்தது. அதன் விலை வெளியிடப்படவில்லை. 2016 ஆம் ஆண்டு இதே சுரங்கத்தில் 1,109 கேரட் வைரம் தோண்டி எடுக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டு கிராஃப்ட் டைமண்ட்ஸ் இன் தலைவரான லண்டன் நகைக்கடை வியாபாரி லாரன்ஸ் கிராப் $53 மில்லியனுக்கு இந்த வைரத்தை வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in World News

To Top