Latest News
ஏர்போர்ட்டில் சூட்கேஸை கடித்து சாப்பிட்ட இளம்பெண்… ஆச்சரியமாக பார்த்த மக்கள்… வைரல் வீடியோ…!
இளம் பெண் ஒருவர் ஏர்போர்ட்டில் சூட்கேஸை கடித்து சாப்பிட்டதை பார்த்த மக்கள் அனைவரும் ஆச்சரியமுடன் பார்த்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமூக வலைதள பக்கங்களில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில வீடியோக்கள் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றது. சில பிராங்க் வீடியோக்களாகவும், நகைச்சுவை வீடியோக்களாகவும் இருந்து வருகின்றன. அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.
அந்த வீடியோவில் ஒரு இளம் பெண் விமான நிலையத்தில் தனது வெள்ளை நிற சூட்கேசுடன் அமர்ந்திருக்கின்றார். திடீரென்று அவர் அந்த சூட்கேஷின் ஒரு முனையை பிடித்து கடித்து சாப்பிட தொடங்குகின்றார். இதை பார்த்த சக பயணிகள் அனைவரும் அதிர்ச்சியில் திளைக்கிறார்கள்.
பின்னர் அந்த சூட்கேஜை கொஞ்சம் கொஞ்சமாக அந்த இளம் பெண் கடித்து சாப்பிட்டு கொண்டு இருக்கின்றார். இறுதியில் தான் அந்த சூட்கேஸ் நிஜமான சூட்கேஸ் அல்ல, சூட்கேஸ் வடிவிலான கேக் என்பது தெரிய வருகின்றது. மேலும் அந்த சூட்கேஸை எடுத்துக்கொண்டு அந்த இளம் பெண் ஏர்போர்டை சுற்று சுற்றி வந்து அனைவரிடமும் சாப்பிட்டு காண்பித்து பிராங்க் செய்கின்றார். இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் அதிகமான பயனர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
View this post on Instagram