World News
வலியே இல்லாம சாகனுமா..? தற்கொலை சாதனத்தில் திடீரென்று ஏற்பட்ட சிக்கல்… கடைசி நிமிடத்தில் ட்விஸ்ட்..!
மனிதனின் வாழ்க்கையை எளிமையாக்குவதற்கு ஏராளமான தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. அவை அனைத்தும் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அன்றாட பணிகளை விரைந்து முடிப்பதற்கு என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மனிதனின் உயிரை பறிக்கவும் சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
டாக்டர் டெத் என்று அழைக்கப்படும் இந்த சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறார். இந்த சாதனத்தில் படுத்துக்கொண்டு ஒரு பட்டனை தொட்டால் போதும் ஒரே நிமிடத்தில் வலியே இல்லாமல் மனிதனின் உயிர் உடலை விட்டு பிரிந்து விடும். கருணை கொலை சட்டபூர்வமான ஒன்று என சுவிட்சர்லாந்து நாட்டில் இந்த சாதனத்தை பயன்படுத்த அந்த நாடு அனுமதி வழங்கி இருக்கின்றது.
டாக்டர் பிலிப் நிட்ச்கே உருவாக்கி இருக்கும் இந்த சாதனம் மூலமாக இறக்க நினைக்கும் மனிதர்கள் வலியின்றி சாகலாம். இந்த சாதனத்தில் உயிரிழக்க பெயர் மற்றும் விவரங்களை வெளியிட ஒரு பெண் முன் வந்தார். அதன்படி இந்த சாதனத்தில் வைத்து உயிரிழக்க ஆயத்தமான பெண் மாயமாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. மனரீதியான பிரச்சினை காரணமாக அந்த பெண் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த சாதனத்திற்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த சாதனம் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் பட்சத்தில் சட்ட நடவடிக்கைகள் மற்றும் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று கூறியிருந்தார்கள். தற்கொலை செய்து கொள்ளும் சாதனத்தை பயன்படுத்த முடியாத நிலையில் அந்த பெண் மாயமாகி இருக்கின்றார். அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று பிலிப் நிட்ச்கே நிறுவனமான எக்ஸிட் இன்டர்நேஷனல் தெரிவித்து இருக்கின்றது.