Corona (Covid-19)
உடலுறவால் கொரோனா பரவுமா ? உலக சுகாதார நிறுவனம் விளக்கம் !
கொரோனா வைரஸ் உடலுறவால் பரவுமா என்ற கேள்விக்கு உலக சுகாதார நிறுவனம் பதிலளித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் உடலுறவு மூலமாக கொரோனா வைரஸ் பரவுமா என்ற சந்தேகத்துக்கு உலக சுகாதார நிறுவனம் ‘இதுவரை கிடைத்த தகவல்களின் படி கொரோனாத் தொற்று பாலியல் ரீதியாக பரவியதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை ‘ எனக் கூறியுள்ளது.
ஆனால் அதே சமயம் ஆய்வுகளின் முடிவில் ’வைரஸை சோதனை செய்ததில் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்தியைத் தாக்கும் ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது” என்ற அதிர்ச்சித் தகவலை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.