கலப்பட உணவால் ஆண்டுக்கு 4 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் 60 கோடி பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி பாதிப்பதாகவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜிப்ரேயிசஸ் தெரிவித்திருக்கின்றார்.
டெல்லியில் 2-வது சர்வதேச உணவுத் தர நிர்ணய அமைப்புகள் மாநாடு நடைபெற்றது. இதில் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ராஸ் அதனம் ஜிப்ரேயிசஸ் வெளியான வீடியோ செய்தியானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘பருவநிலை மாற்றம், மக்கள் தொகை வளர்ச்சி, புதிய தொழில்நுட்பங்கள், உலகமயமாதல் தொழில்மயமாக்கல் ஆகியவற்றால் நமது உணவு முறைகள் சவால்களை சந்தித்து வருகின்றது.
மேலும் கலப்பட உணவு மூலமாக உலகம் முழுவதும் ஆண்டுக்கு 60 கோடி பேர் நோய்வாய்ப்படுகிறார்கள். வருடத்திற்கு 4 லட்சம் பேர் ஆண்டுக்கு உயிரிழக்கிறார்கள். அவர்களில் 70 சதவீதம் பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவார்கள். எனவே பாதுகாப்பற்ற உணவை தடுக்க வேண்டிய முக்கிய பங்கு உணவு தர நிர்ணய அமைப்புகளுக்கு உள்ளது. 30 லட்சம் பேருக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு கிடைப்பது இல்லை.
எனவே ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். பாதுகாப்பான உணவு எளிதாக அனைவரும் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம் என தெரிவித்திருந்தார். மேலும் இந்த மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜேபி நட்டா, உணவுத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சுகாதாரத் துறை செயலாளர் அபூர்வ சந்திரா, உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணைய தலைவர் கமலா வர்த்தன ராவ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.