கொரோனா வைரஸ் என்று சொல்லக் கூடாது.. மாஸ்க் அணிந்தால் சிறை! எந்த நாட்டில் தெரியுமா?

கொரோனா வைரஸ் என்று சொல்லக் கூடாது.. மாஸ்க் அணிந்தால் சிறை! எந்த நாட்டில் தெரியுமா?

துர்க்மேனிஸ்தான் என்ற நாட்டில் பொது இடத்தில் மக்கள் முகக்கவசம் அணிந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அறிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,00,000 ஐ நெருங்கியுள்ளது. தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 47,000 ஐ நெருங்கியுள்ளது. இந்த பாதிப்பு முதலில் சீனாவில் அதிகமாகக் காணப்பட்டாலும் இப்போது அந்நாடு அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1800 ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவை எதிர்கொள்ள உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய ஆசியாவில் உள்ள நாடான சிறிய தீவுக்கூட்டமான துர்க்மேனிஸ்தானில் இதுவரை ஒரு கொரோனா நோயாளி கூட கண்டறியப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த செய்தி மகிழ்ச்சியை அளித்தாலும் அந்நாட்டு மக்களுக்கு விதிக்கப்படும் கெடுபிடிகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

காரணம் அந்நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் மக்கள் பொது இடத்தில் முகக்கவசம் அணியவோ அல்லது கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதை மீறி செயல்படுவோர் கைது செய்யப்படுவார்கள் என அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்.