Latest News
4 ஆண்டு பதவி காலத்தில் 532 நாள் விடுமுறை… அமெரிக்க அதிபர் பைடன் மீது குற்றச்சாட்டு…!
அமெரிக்க அதிபர் பைடன் 4 ஆண்டு பதவிக்காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருக்கின்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் நடைபெற இருக்கின்றது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹரிஷ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகின்றார்கள். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தனது 4 ஆண்டுகால பதவி காலத்தில் 532 நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்று குடியரசு கட்சியின் ஆர் என் சி ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
532 நாட்கள் என்பது பைடனின் பதவி காலத்தில் 40% ஆகும். சராசரியாக அமெரிக்க அரசு ஊழியர் 48 வருடத்திற்கு எடுக்கக்கூடிய விடுமுறையை பைடன் 4 ஆண்டுகளில் எடுத்துள்ளார் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒரு அரசு ஊழியர் வருடத்திற்கு 10 முதல் 14 நாட்கள் மட்டும் தான் ஓர் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பெற முடியும்.
கடந்த ஆண்டு பைடனுக்கு எதிராக குடியரசு கட்சியினர் இதே போன்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்கள். அப்போது பதில் அளித்த வெள்ளை மாளிகை விடுமுறையின் போது பைடன் தனது ஜனாதிபதி கடமைகளில் தீவிரமாக ஈடுபடுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.