Connect with us

வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்படுபவருக்கு இப்படி ஒரு நிலைமையா…? போராட்டக்காரர்கள் செய்த அட்டூழியம்…!

World News

வங்காளதேசத்தின் தந்தை எனப் போற்றப்படுபவருக்கு இப்படி ஒரு நிலைமையா…? போராட்டக்காரர்கள் செய்த அட்டூழியம்…!

வங்காள தேசத்தில் ஏற்பட்டுள்ள கலவரம் மற்றும் ஆட்சி மாற்றம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கின்றது. ஷேக் ஹசீனா பதவியில் இருந்து விலகி தற்போது இந்தியாவில் தஞ்சம் அடைந்து இருக்கின்றார். அவர் வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய பிறகும் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்து வருகின்றன.

ஷேக் ஹசீனா மாளிகைக் குழு சென்ற போராட்டக்காரர்கள் தற்காலிக கூடாரத்திற்கு தீ வைத்தனர். மாளிகையில் உள்ள சமையலறைக்கு சென்று சமைத்து வைத்த உணவுகளை சாப்பிட்டு படுக்கையறையில் போட்டோ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

மேலும் அவருடைய சேலைகள் கண்ணில் பட்டதை அனைத்தையும் கொள்ளையடித்து சென்றார்கள். போராட்டக்காரர்கள் மாளிகை வளாகத்தில் இருந்த வாத்து, முயல், கோழி போன்றவற்றை பிடித்து சென்றார்கள். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேசத்தின் முதல் அதிபருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையை உடைக்கும் வீடியோவானது இணையத்தில் பரபரப்பு ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மற்றொருவர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் சிலையின் தலை மீது ஏறி சிறுநீர் கழிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவருக்கு இப்படிப்பட்ட நிலைமையா என்று பலரும் கூறி வருகிறார்கள். இந்த வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

More in World News

To Top