Latest News
ட்ரம்பை கொலை செய்தால் ரூபாய் 1.25 கோடி… கான்ட்ராக்ட் போட்ட குற்றவாளி… விசாரணையில் பகிர் தகவல்…!
ட்ரம்பை கொலை செய்தால் ரூபாய் 1. 25 கோடி தருவதாக குற்றவாளி காண்ட்ராக்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் களம் இறங்கி இருக்கின்றார். இவர் மீது பலமுறை கொலை முயற்சி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12-ம் தேதி பென்சில்வேனியா மாநாட்டில் மேத்யூ என்ற இளைஞன் நடத்திய துப்பாக்கி சூட்டில் நூலிலையில் உயிர் தப்பினார் ட்ரம்ப்.
இதைத்தொடர்ந்து செப்டம்பர் 15ஆம் தேதி ஃப்ளோரிடா கோல்ட் மைதானத்தில் வைத்து மீண்டும் கொலை முயற்சி நடத்தப்பட்டது. சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏகே 47 துப்பாக்கியால் ட்ரம்பை நோக்கி வேலி வழியாக குறி பார்த்து இருந்தார். இதை பார்த்த டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.
சற்று நேரத்துக்குள் போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். இந்நிலையில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. அதில் பகீர் தகவல் வெளியாகி இருக்கின்றது. ராயனின் காரில் ட்ரம்ப் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி குறித்த கையால் எழுதிய அட்டவணை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தாக்குதல் குறித்த குறிப்பையும் எழுதி வைத்திருக்கிறார்கள்.
டியர் ஓல்ட் என்ற தலைப்பிடப்பட்ட அந்த குறிப்பை பெயர் தெரியாத ஒருவரின் வீட்டு வாசலில் வைத்துவிட்டு சென்றிருக்கின்றார் ராயன். அந்த பெட்டியை திறக்காமல் வீட்டின் உரிமையாளர் அதை போலிஸிடம் ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த பெட்டியில் துப்பாக்கி குண்டுகளும் இரும்பு பைப் பொருள்களும் இருந்துள்ளது.
அதில் ட்ரம்ப் மீதான கொலை முயற்சி இது. ஆனால் என்னால் முடிந்த வரை எனது முழு சக்தியை பயன்படுத்தி இதை செய்து முடிக்க முயற்சி செய்தேன். இப்போது இந்த வேலையை செய்து முடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பு நான். ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலர் தருகின்றேன் என்று எழுதி வைத்திருக்கின்றார் இந்தப் பெட்டி இருந்த வீட்டில் வசித்து வந்தவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.