World News
காதலே காதலே தனிப்பெரும் துணையே… தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதல் சொன்ன சக வீரர்.. ஒலிம்பிக் போட்டியில் சுவாரசியம்..!
பாரிஸ் ஒலிம்பிக் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. தொடர்ந்து பல நாட்டினை சேர்ந்த வீரர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம் பதக்கங்களை வென்று குவித்து வருகிறார்கள். நேற்று பிரிவு இறுதியில் சீனாவின் ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் ஒருவரை ஒருவர் மோதிக்கொண்டனர்.
போட்டியின் தொடக்கம் முதலிலே சிறப்பாக ஆடிய சீன ஹியாங் யா கியாங்க் – ஜேங் சிவேய் ஜோ கொரிய ஜோடியை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றது. தங்க பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனையான ஹியாங் யா கியாங் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் எதிர்பாராத நேரத்தில் அவருடன் விளையாடும் சக வீரரான லியூ யூசேன் தனது காதலை வெளிப்படுத்தினார். தனது கையில் வைத்திருந்த வைர மோதத்தை காட்டி வீராங்கனை ஹியாங் யா கியாங்க் முன்பு மண்டியிட்டு என்னை திருமணம் செய்து கொள்வாயா? என்று கேட்டார்.
இதை எதிர் பார்க்காத ஹியாங் யா கியாங்க் ஆனந்த் கண்ணீரில் தத்தளித்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகழ்ச்சி அடைய வைத்தது. பின்னர் காதலை ஏற்பதாக தலையசைத்து வைர மோதத்தை அணிவித்து விடுமாறு தனது விரலை நீட்டினார். அங்கு போட்டியை பார்க்க வந்த ரசிகர்கள் பலரும் கைதட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.