Latest News
12 வருஷமா ஒரு நாளைக்கு 30 நிமிடம் மட்டும் தூக்கம்… வினோத மனிதனின் சுவாரசிய கதை…!
12 வருடமாக ஒரு மனிதர் ஒரு நாளைக்கு வெறும் 30 நிமிடங்கள் மட்டும் தூங்கி வாழ்நாட்களை கழித்து வருவதாக கூறப்படுகின்றது.
சீரான மனநிலையை பெறுவதற்கும், சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் தூக்கம் என்பது மிக அவசியமான ஒன்று. ஒருவர் வாழ்வதற்கு சராசரியாக 6 முதல் 8 மணி வரை தூக்கம் என்பது வேண்டும். இதுதான் மருத்துவர் ரீதியிலான உண்மை. ஆனால் கடந்த 12 வருடங்களாக ஒரு நாளைக்கு அரை மணி நேரம் அதாவது வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே ஒருவர் தூங்குகிறார் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
தனது வாழ்நாளை இரட்டிப்பாக அனுபவிப்பதற்காக ஜப்பானை சேர்ந்த 40 வயதான டைசுக்கே ஹோரி என்பவர் கடந்த 12 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறாராம். வடக்கு ஜப்பானில் உள்ள மாகாணத்தை சேர்ந்த ஹோரி தனது உடலையும் மூளையையும் குறைந்த தூக்கத்திற்கு பழக்கப்படுத்தியுள்ளார். அதன்மூலம் செயல்படும் திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்து இருக்கின்றார்.
நீண்ட நேர தூக்கத்தை விட ஆழமான குட்டி தூக்கம் தங்களின் செயல் திறனை மேம்படுத்துவதாகவும் வேலை திறனை அதிகரிக்க உதவுவதாகவும் ஹோரி தெரிவித்திருக்கின்றார். இவரின் வாழ்க்கை நிகழ்ச்சி யமோரி என்ற தொலைக்காட்சியில் 3 நாட்கள் தொடர்ந்து வில் யு கோ வித் மீ என்ற நிகழ்ச்சியாக ஒளிபரப்பு ஆகியது.
ஆச்சிரியப்படும் வகையில் நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் தூங்கிய அவர் அதிக சுறுசுறுப்புடன் தனது வேலைகளை செய்து இருக்கின்றார். உணவு உண்பதற்கு பல மணி நேரத்திற்கு முன்பு உடற்பயிற்சி செய்வதும், காபி குடிப்பதும் தூக்கு கலக்கத்தை நீக்கும் என்று தெரிவிக்கின்றார். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் குறைந்த தூக்கத்திற்கான பயிற்சி வகுப்புகளை எடுத்து வரும் கோரி இதுவரை 2,100 அல்ட்ரா ஷார்ட் ஸ்லீப்பர்களை தயார்படுத்தி இருக்கின்றாராம்.