Latest News
விண்வெளி வீரர்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பிய ஸ்டார்லைன் விண்கலம்… தொடர்ந்து சிக்கலில் சுனிதா வில்லியம்ஸ்…?
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோருடன் விண்வெளி சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் தற்போது அவர்கள் இல்லாமல் பூமி திரும்பியிருக்கின்றது.
இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த 5-ம் தேதி போயிங் நிறுவனத்தின் ஸ்டார்லைனர் விண்கலத்தின் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றனர். அவர்கள் 8 நாட்களுக்குப் பிறகு பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஹீலியம் வாய்வு கசிவு ஏற்பட்டதால் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கின்றது. இதனால் அவர்கள் விண்வெளியில் சிக்கி வருகிறார்கள். இதற்கிடையே சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளியில் இருந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூமிக்கு திரும்புவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்பேக்ஸ் நிறுவனத்தின் குரு டிராகன் விண்கலம் மூலமாக அவர்கள் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கின்றது. போயிங் ஸ்டார் லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி ஸ்டார் லைனர் விண்கலம் விண்வெளியிலிருந்து இந்திய நேரப்படி நேற்று மாலை பூமிக்கு புறப்பட்டது. இன்று காலை 9:30 ஸ்டேட்டஸ் ஸ்பேஸ் ஹார்பரில் தரை இறங்கியது. பூமியை நெருங்கிய போது மின்கலத்தில் இருந்து பாராசூட் விரிவடைந்து விண்கலம் மெதுவாக தரை இயங்கியது. விண்கலத்தில் தொழில்நுட்பக் கூடாது எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.