Connect with us

என் தாயை பார்க்க முடியாமல் மனம் உடைந்தேன்… சேக் ஹசீனா மகள் உருக்கம்…!

World News

என் தாயை பார்க்க முடியாமல் மனம் உடைந்தேன்… சேக் ஹசீனா மகள் உருக்கம்…!

தன் தாயை பார்க்க முடியாமல் மனம் உடைந்து போனதாகவும், சேக் ஹசீனாவின் மகள் மணமுடைந்து பேசியிருக்கின்றார்.

வங்காளதேசத்தில் சேக் ஹசீனா தலைமையிலான அவாமி லிக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அந்நாட்டு விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30% இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் செய்து வந்தனர். இந்த போராட்டம் தீவிரமடைந்த நிலையில் வன்முறையாக வெடித்தது .

இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தார். பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது சஹாபுதீன் களைத்து உத்தரவிட்டார். இதையடுத்து இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் நியர்மிக்கப்பட்டு இருக்கின்றார்.

இந்நிலையில் தன் தாயை பார்க்கவோ அரவணைக்கவும் முடியாமல் மனம் உடைந்து இருக்கின்றேன் என்று வங்காளதேச முன்னாள் பிரதமர் சேக் ஹசீனாவின் மகள் சைமா வசேத் தெரிவித்து இருக்கின்றார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருந்ததாவது: “வங்காளதேசத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

எனது நாட்டில் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகள் எனக்கு வேதனை அளிக்கின்றது. இந்த இக்கட்டான நேரத்தில் என் தாயை பார்க்கவோ, அரவணைக்கவோ முடியாத அளவுக்கு மனம் உடைந்து இருக்கின்றது. அதே நேரத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குனர் பொறுப்பை நான் வகுப்பதில் உறுதியாக இருக்கின்றேன்” என்று தெரிவித்திருந்தார்.

More in World News

To Top