Latest News
எஜமானரே துப்பாக்கியால் விரட்டுவிரட்டு தாக்கிய ரோபோ நாய்… வைரல் வீடியோ…!
துப்பாக்கியால் ரோபோ நாய் விரட்டி விரட்டி தாக்கிய வைரல் வீடியோவான இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியின் போது பிரபல யூட்யூபரை நெருப்பு துப்பாக்கியால் சுட்ட வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஸ்பீடு என்று அறியப்படும் பிரபல அமெரிக்க youtubeரான டாரன் ஜான்சன். சமீபத்தில் ஒரு லட்சம் டாலருக்கு அதாவது இந்திய மதிப்பு படி 84 லட்சம் ரூபாய்க்கு ஒரு ரோபோ நாய்குட்டியை வாங்கி இருக்கின்றார்.
அதை நேரடியாக ஆன்லைன் வீடியோவில் பரிசித்து பார்த்திருக்கின்றார். முதலில் ரோபோ நாய்க்கு கை கொடுத்திருக்கின்றார். அந்த நாயும் முன்னங்காலை தூக்கி கை கொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடிக்க நாயும் துள்ளி குதித்தது. ரோபோ நாயில் இணைக்கப்பட்டிருக்கும் துப்பாக்கி பொத்தானை யூட்யூபர் ஆன் செய்துவிட்டு குறைக்கும்படி கட்டளையிட்டுள்ளார்.
ஆனால் ரோபோநாய் எதிர்பாராத விதமாக துப்பாக்கியை இயக்கி எஜமானரையே எதிரியாக நினைத்து சுட தொடங்கியது. துப்பாக்கியிலிருந்து நெருப்பு பிளந்து வெளியேறி யூடியூப்பை தாக்க தொடங்கியது . அருகே ஸ்விம்மிங் பூல் இருந்ததால் அதில் குதித்து அந்த youtube தப்பித்துவிட்டார்.
அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கி தொடர்ந்து சுட ஆரம்பித்தது. ஒரு வழியாக அதன் பார்வையிலிருந்து தப்பி பின்புறமாக வந்து துப்பாக்கி பொத்தானை நிறுத்தி ரோபோ நாய் சுடுவதை தடுத்து இருக்கின்றார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. நேரலயில் வெளியான இந்த வீடியோ அவரின் ரசிகர்களை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை 3 நாட்களில் 4.5 கோடி பார்வையாளர்கள் பார்த்து இருக்கிறார்கள்.