Latest News
உலகிலேயே 5-ல் 1 பங்கு ப்ளாஸ்டிக் கழிவுகள்… இங்கதான் உருவாகுது… ஆய்வில் வெளியான தகவல்…!
உலகில் ஐந்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகளால் பூமியை மாசுபடுத்தும் நாடுகளின் பட்டியல்களில் இந்தியா முதல் இடத்தில் இருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 93 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றது என்று நேச்சர் ஜர்னலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்திருக்கின்றது. உலக அளவில் ஐந்தில் ஒரு பங்கு பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியாவில் தான் உருவாகி வருகின்றது.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு நாளும் 120 கிராம் பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றார்கள். இந்தியாவிற்கு அடுத்தபடியாக நைஜீரியா மற்றும் இந்தோனேசியா நாடுகளில் அதிக அளவில் கொட்டப்படுகின்றன. அந்த நாடுகளின் முறையே 35 லட்சம் மற்றும் 34 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றது.
உலகில் அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா 4-ம் இடத்தில் இருக்கின்றது. இதற்கு முன்பு அதிக அளவிலான பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்கும் நாடாக இருந்துள்ளது. ஆனால் அந்நாட்டில் சிறப்பாக மேற்கொள்ளப்படும் கழிவு மேலாண்மையால் பிளாஸ்டிக் கழிவுகளை சீனா குறைத்து இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்தியாவில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றது என்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.