ஜப்பான் நோக்கி வந்து கொண்டிருந்த கட்னாஸ் என்கின்ற விமானத்தில் திடீரென்று ஒரு மணி நேரம் ஆபாச படம் ஒளிபரப்பான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவிலிருந்து ஜப்பான் நோக்கி விமானத்தில் பயணிகள் இருக்கையின் முன்பு உள்ள திரைகளில் ஆபாச படம் ஒளிபரப்பாகியுள்ளது. ஆஸ்திரேலியா நகரமான சிட்னியில் இருந்து ஜப்பானில் இருக்கும் ஹனேடா நகருக்கு கடந்த வாரம் பயணிகளை ஏற்றுக்கொண்டு கட்னாஸ் என்கின்ற விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டு இருக்கின்றது.
ஒவ்வொரு இருக்கைக்கு முன்பு பயணிகளின் பொழுதுபோக்குக்காக ஸ்மார்ட் டிவி மாற்றப்பட்டிருக்கும். அதில் தங்களுக்கு விருப்பமான படங்களை பயணிகள் தேர்வு செய்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால் அன்றைய தினம் பயணிகளால் படங்களை தேர்ந்தெடுக்க முடியவில்லை. அதற்கு பதிலாக அனைவரது திரைகளிலும் ஆபாச படம் திடீரென்று ஒளிபரப்பாகி உள்ளது.
அதை பயணிகள் பாஸ் செய்து நிறுத்தவோ அல்லது ஆப் செய்யவோ முயற்சி செய்தும் முடியாமல் போனதால் பலருக்கும் அசௌகரியமான சூழல் ஏற்பட்டது. விமானத்தின் சிஸ்டமில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இது போன்ற நடைபெற்றதாக விமான ஊழியர்கள் விளக்கம் கொடுத்தார்கள்.
சுமார் ஒரு மணி நேரம் ஆபாச திரைப்படம் ஓடிய பிறகு அந்த படம் நிறுத்தப்பட்டது. பழுதுகள் சரி செய்யப்பட்டு வேறு படங்களை மாற்றி இருக்கிறார்கள். இது குறித்து விமானத்தில் பயணித்த சிலர் பேசியதை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்கு இடையே இந்த சம்பவத்திற்கு கட்னாஸ் விமான சேவை மன்னிப்பு கோரி இருக்கின்றது.