World News
உயிரிழந்த கர்ப்பிணி… வயிற்றில் உயிருடன் இருந்த குழந்தை… இஸ்ரேல் தாக்குதலில் நேர்ந்த சோகம்…!
இஸ்ரேல் தாக்குதலின் போது கர்ப்பிணி உயிரிழந்த நிலையில் அவரின் வயிற்றில் இருந்த குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். இஸ்ரேல் காசா இடையே கடந்த அக்டோபர் ஏழாம் தேதி முதல் போர் தொடங்கியிருக்கின்றது. ஒன்பது மாதங்களாக தொடரும் இந்த போரின் இதுவரைக்கும் 38000 மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
இந்த போரை எப்படி நிறுத்துவது என்று பல உலக நாடுகள் பலரும் குழம்பிப் போய் இருக்கிறார்கள். மேலும் இந்த போரை நிறுத்தும்படி வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாலஸ்தீனம் அருகே நூசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேலின் தாக்குதலால் இலா அட்டெனண்ட் என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்தார். அவர் வயிற்றில் இருந்த குழந்தை உயிருடன் இருந்த நிலையில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியில் எடுத்திருக்கிறார்கள். குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை அளித்ததை தொடர்ந்து தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். நள்ளிரவில் இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மேலும் நேற்று இரவு நடந்த தாக்குதலில் 24 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.