Latest News
பூமியைப் போலவே புதிய கிரகம் கண்டுபிடிப்பு… உயிர்கள் வாழ வாய்ப்பு அதிகம்… விஞ்ஞானிகள் சொல்வது என்ன..?
பூமியை போலவே மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சூரியனை சுற்றும் கிரகங்கள் சூரிய குடும்பத்தில் அடங்கும். அதேபோல சூரிய குடும்பத்திற்கு வெளியில் உள்ள நட்சத்திரங்களை சுற்றும் கோள்களும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றது. இதனை கிரகங்கள் வெளிப்புற கோள்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதுவரை இதுபோல 5600 வெளிக் கோள்கள் மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் நட்சத்திர மண்டலத்தில் 40 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் ஒரு புதிய வெளிப்புற கிரகத்தை நாசாவின் எக்சோபிளானட் சர்வே சாட்டிலைட் என்ற தொலைநோக்கி மூலமாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அங்கு உயிர் வாழ்வதற்கான தன்மை இருப்பதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் இந்த புதிய கோளுக்கு Gliese 12b என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. டுவார்ப் விண்மீனை சுற்றி வருவதற்கு இந்த கிரகம் 12.8 நாட்கள் எடுத்துக் கொள்கின்றது. பூமி மற்றும் வெள்ளி ஆகிய கிரகங்களின் எடைகளுக்கு இடைப்பட்ட இடையில் இந்த கிரகத்தில் நீர் திரவம் அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
சூரியன் எடையில் 26 சதவீதம் உள்ள இந்த Gliese 12b கிரகத்தில் 42 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை காணப்படுகின்றது. திரவ நீர் மற்றும் உயிர் வாழ்வதற்கான தட்பவெப்பம் ஆகியவை ஒருங்கே அமைந்த இந்த புதிய கிரகம் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.