Latest News
இருக்குற பிரச்சனை பத்தாது…இது வேறயா?…நடுங்க வைக்கும் நாசாவின் ரிப்போர்ட்!…
நிலவில் குடியேறலாமா?…செவ்வாயில் தண்ணீர் உண்டா? நமக்கு தெரியாமல் வேறு ஏதும் கோள்கள் ஒழிஞ்சி கிடக்கிறதா? என தீவிர ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் வருகிறது.
உலக நாடுகள் பலவும் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவின் நாசா வின்வெளி ஆய்வு மையம் அடிக்கடி இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டே வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் நாசா மாரிலந்த்தில், ஜான் ஹாப்கின்ஸ் ஆய்வுகூடத்தில் கிரகங்களின் பாதுகாப்பு, விண்வெளியிலிருந்து பூமிக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டது.
இந்த சோதனை தொடர்பாக கடந்த 20ம் தேதி அறிக்கையை வெளியிட்டது நாசா. இதில் பூமிக்கு ஆபத்து விளைவிக்க கூடிய ஆபத்து ஒன்று நெருங்கி வருவதாகவும், அதை எதிர்கொள்ள நாம் இன்னும் தயாராகவில்லை என எச்சரித்துள்ளது.
டார்ட் – DART (Double Asteroid Redirection Test) என்னும் இந்த அதிநவீன தொழில் நுட்ப உதவியுடன் கூடிய முதல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன் முடிவில் தான் அதிர்ச்சி தரக்கூடிய அறிக்கையை நாசா சொல்லியுள்ளது.
விண்கல் ஒன்று பூமியை தாக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது தான் அந்த கலக்கம் கொடுக்ககூடிய ரிப்போர்ட். எழுபத்தி இரண்டு சதவீதம் இந்த தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக உறுதியாக சொல்லிவிட்டது. இதை எப்படி எதிர்கொள்வது என்பதும், இதனால் என்ன என்ன பாதிப்புகள் ஏற்படும் எது விரைவில் தெரியவரும்.
வாழ்க்கையில் இருக்கிற பிரச்சனைகள் போதாதுன்னு இது வேறயா?, என சொல்லும் படியாகத்தான் இந்த அறிக்கை மக்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி தான் இருந்திருக்கும்.