World News
ஹேட்டர்ஸ் இத AI அப்படின்னு சொல்லுவாங்க… ட்ரம்ப் உடன் சேர்ந்து நடனம் ஆடும் வீடியோவை பகிர்ந்த மஸ்க்…!
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவர் மற்றும் எக்ஸ் ஸ்தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க். இவர் அமெரிக்கா அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்ட் ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றார். சில நாட்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஸ்பேசஸில் டிரம்பை நேர்காணல் செய்திருந்தார்.
உலகம் முழுவதிலும் இருந்தும் இந்த நேர்காணலை சுமார் 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருந்தனர். இந்நிலையில் எலான் மஸ்க் தனது எக்ஸ் தள பக்கத்தில் அவரும் டொனால்ட் டிரம்ப்பும் நடனமாடும் ஏஐ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில் ‘எங்களை வெறுப்பவர்கள் இதனை ஏஐ என்று கூட சொல்லலாம்’ என்று கிண்டல் அடித்திருக்கின்றார்.
இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த ஏஐ வீடியோவில் ‘பீ கிஸ்’ என்ற கிளாசிக் மியூசிக் ஆல்பத்தில் ஸ்டேயிங் அலை என்ற பாடலுக்கு ட்ரம்பும் எலான் மஸ்க்கும் நடனமாடுகிறார்கள். மேலும் சமீபத்தில் பேஷன் ஷோவில் உலக அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் ஒவ்வொருவராக சிரிப்பூட்டும் வித்தியாசமான கெட்டப்பில் நடந்து வரும் வீடியோவை தனது எக்ஸ் தள பக்கத்தில் எலான் மஸ்க் பகிர்ந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.