---Advertisement---

ஒலிம்பிக் போட்டி… 2 பதக்கம் வென்ற வெற்றி நாயகிக்கு… டெல்லியில் உற்சாக வரவேற்பு…!

Published on: August 7, 2024
---Advertisement---

பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்று நாடு திரும்பிய மனு பாக்கருக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 33வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகின்றது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்று இந்த விளையாட்டை இறுதிக்கட்டத்தை நோக்கி கொண்டு சென்று இருக்கிறார்கள். இதுவரை இந்தியா 3 வெண்கல பதக்கங்களை வென்றிருக்கின்றது.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை பதக்கம் வென்று டெல்லி விமானம் வந்த மனு பாக்கருக்கு பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினார்கள். இது குறித்து மனு பாக்கர் தெரிவித்த போது இங்கே இவ்வளவு அன்பை பெற்றதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். 10 மீட்டர் தனி நபர் ஏர் பிஸ்டல், 10 மீட்டர் ஏர் மிஸ்டல் கலப்பு இரட்டை பிரிவில் மனு பாக்கர் வெண்கல பதக்கம் வென்று இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now