Latest News
அலுவலகத்தில் அத்துமீறிய கள்ளக்காதல் ஜோடி… நிர்வாகம் கொடுத்த அதிரடி தண்டனை…!
அலுவலகத்தில் அத்துமீறி நடந்து கொண்ட கள்ளக்காதல் ஜோடியை வேலையை விட்டு நீக்கி இருக்கின்றது நிர்வாகம்.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் லியூ என்பவருக்கும் சென் என்ற பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருக்கின்றது. ஏற்கனவே இவர்கள் இருவருக்கும் தனித்தனியாக திருமணம் ஆகி இருக்கின்றது. இருப்பினும் திருமணத்திற்கு புறம்பான உறவில் இருவரும் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.
இதனை மனைவி கண்டுபிடித்து இருக்கின்றார். இது குறித்து நிறுவனத்தின் மேனேஜரிடம் அவர் புகார் அளித்திருக்கின்றார். இதனால் இந்த விவகாரம் பூதாகரமாக வெடிக்க லியூ எடுத்துள்ளார். பின்னர் இந்த விவகாரம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து அலுவலகத்திற்கு இருவரும் மீண்டும் திரும்பி இருக்கிறார்கள்.
ஆனால் அலுவலகத்திற்கு வந்த இவர்கள் அலுவலகத்திற்குள்ளேயே மீண்டும் முத்தமிட்டுக்கொண்டது பிரச்சினையை உருவாக்கியது. பின்னர் நிறுவன விதிகளை மீறியதாக இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து பணி நீக்கத்தை எதிர்த்து இருவரும் தனித்தனியாக சுமார் 3 லட்சம் நஷ்ட ஈடு கோரி நீதிமன்றத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணை செய்து தள்ளுபடி செய்து விட்டது.