World News
கால் வைக்கிற இடம் தான் கண்ணிவெடின்னு பார்த்தா… கழிவரையிலும் வைக்கிறாங்களே… அதிர்ச்சி சம்பவம்…!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கழிவறைக்கு அடியில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
வாட்ஸ் அப் கார் வாஷிங் நிறுவனத்தின் கிளை நிலையங்களில் உள்ள கழிவறையில் சிறிய அளவிலான வெடி விபத்து அடுத்தடுத்து நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அந்த நிலையங்களில் உள்ள கழிவறை இருக்கைகளில் வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டுகள் அழுத்தினால் வெடிக்க கூடியவை.
யாரேனும் கழிவறை இருக்கைகளில் அமர்ந்து வெடிகுண்டுக்கு தேவையான அளவு ஏற்படும் பட்சத்தில் அவை வெடிக்கும். சிறிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தக் கூடியது இந்த வெடிகுண்டுகள். இதுபோன்ற வெடி விபத்துகள் கடந்த ஜூலை 19, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தொடர்ந்து நடந்திருக்கின்றது.
சமீபத்தில் வேடி விபத்தில் பெண் கஸ்டமர் ஒருவர் படுகாயம் அடைந்திருந்தார். இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் அனைத்து கிளைகளுக்கும் வந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை தொடங்கி இருக்கிறார்கள். இதையடுத்து அல்டென் என்ற நபரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அல்டென் அந்நிறுவனத்தின் வாடிக்கை கஸ்டமர் என்றும், வெடி விபத்து நடப்பதை அருகில் இருந்து பார்த்துவிட்டு அவர் சென்றுள்ளார் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கின்றது.