Latest News
யாருப்பா நீ… 18 வருஷமா பக்கத்து வீட்டு மின் கட்டணத்தையும் சேர்த்து செலுத்தி வந்த நபர்… சுவாரஸ்ய சம்பவம்..!
18 வருடமாக அமெரிக்காவில் ஒரு நபர் தன்னுடைய அண்டை வீட்டாரின் மின்கட்டணத்தையும் சேர்த்து செலுத்தி வந்திருக்கின்றார்.
அமெரிக்கா, கலிபோர்னியாவில் உள்ள வாகாவில் என்ற நகரத்தில் வசித்து வருபவர் கென் வில்சன் தொடர்ந்து தனது மின் கட்டணம் அதிகரித்து வருவதை கவனித்திருக்கின்றார். இதையடுத்து பசிபிக் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் கம்பெனி வாடிக்கையாளரான கென் தனது மின்கட்டணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருந்தார்.
அவர் முயற்சியால் சில மாற்றம் ஏற்பட்டதால் அவர் மேலும் இதை விசாரிக்க முடிவு செய்தார். தனது மின்சார பயன்பாட்டை கண்காணிப்பதற்கு ஒரு சாதனத்தை வாங்கினார். பிரேக்கர் ஆப் செய்யப்பட்டிருந்த நிலையிலும் தொடர்ந்து அவரின் மீட்டர் இயங்குவதை கண்டுபிடித்து இருக்கின்றார். பின்னர் இந்த பிரச்சனை குறித்து பசிபிக் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் கம்பெனி தொடர்பு கொண்டு ஆய்வுக்கு ஒருவரை அனுப்பும்படி கேட்டுக் கொண்டிருக்கின்றார்.
அவர்கள் விசாரணை செய்ததில் வாடிக்கையாளரின் அப்பார்ட்மெண்ட் மீட்டர் எண்ணிற்கு மற்றொரு அப்பார்ட்மெண்டுக்கான மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருவதாக பசுபிக் கேஸ் மற்றும் எலக்ட்ரிக் கம்பெனி தெரிவித்திருந்தது.
மேலும் தனது தவறை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டது. அது மட்டுமல்லாமல் கென் வில்சனுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு அவரிடம் மன்னிப்பு கோரி உள்ளது. கிட்டத்தட்ட 18 வருடங்களாக அந்த நபர் தனது வீட்டுடன் சேர்த்து அண்டை வீட்டின் மின்கட்டணத்தையும் சேர்த்து செலுத்தி வந்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.