உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் ட்ரம்ப்பின் மகளும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உலகத்தையே சமீபகாலமாக கொரோனா எனும் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் முடக்கியுள்ளது. இதனால் பல நாடுகள் பொருளாதார சீரழிவுகளை சந்தித்து வருகின்றனர். சாதாரண மக்கள் மட்டுமில்லாமல் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் அரசியல் வாதிகள் வரை இந்த வைரஸ் தாக்குதலுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்ப்புக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என செய்திகள் வெளியாகி பீதியைக் கிளப்பியுள்ளன. சமீபத்தில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வந்து ட்ரம்ப்பின் மகள் இவான்கா ட்ரம்பை சந்தித்து சென்ற ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவான்காவும் வைரஸ் தொற்று இருக்கலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த செய்தியை வெள்ளை மாளிகை இன்னும் உறுதிப் படுத்தவில்லை.