World News
இப்படி யாரும் ஸ்கின் கேர் சொல்லியிருக்க மாட்டாங்க… முகத்தில் மலம்… அதிர்ச்சியை கிளப்பிய இன்ஸ்டா பிரபலம்…!
பிரேஸ்லை சேர்ந்த இன்ஸ்டால் பிரபலம் செய்த காரியம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கின்றது.
பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டால் பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா. இவர் வயதாவதை தடுப்பதற்கான சரும பராமரிப்பு எனக் கூறி மலத்தை முகத்தில் பூசிக்கொண்டு செய்த சம்பவம் பேசும் பொருளாகி இருக்கின்றது. அந்த வீடியோவில் அவர் தனது முகத்தில் மலத்தை எப்படி பயன்படுத்துவது என்பது தொடர்பான காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றது.
இன்ஸ்டாகிராமில் 6 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை வைத்திருக்கும் இவர் தனது மலத்தை வழக்கமான பேஸ் பேக் போல் தடவிக் கொண்டிருக்கின்றார். அதைத் தொடர்ந்து இந்த ஃபேஸ் மாஸ்க்கை கழுவுகின்றார். அதன் பின் அவர் சருமத்தை காட்டுவது போல் இந்த வீடியோ முடிகின்றது. மேலும் இது எனக்கு வேலை செய்தது. என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
வழக்கத்திற்கு மாறாக இந்த அழகு சிகிச்சையை விமர்சித்த மருத்துவ நிபுணர்கள் இவ்வாறு செய்வதால் நன்மையை விட அபாயங்கள் அதிகம் என்று எச்சரித்திருக்கிறார்கள். மேலும் லண்டனில் உள்ள கடோக்கன் கிளினிக்கின் சரும மருத்துவரான டாக்டர் ஜோபி மோமின் தெரிவித்திருந்ததாவது “அனைத்து தோல்ப பராமரிப்பு போக்குகளிலும் இது நான் கண்ட விசித்திரமான ஒன்று.
மலத்தை ஃபேஸ் மாஸ்காக பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்ற எந்த அறிவியல் ஆதாரமும் கிடையாது. தனது மாதவிடாய் ரத்தத்தை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தி இருந்தார். இதை தற்போது அவர் புதுவித யோசனையுடன் வந்திருக்கின்றார். இது சருமத்தில் மாற்றம் ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்திருப்பதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது” என்று அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.