---Advertisement---

தலை குப்புற கவர்ந்த எண்ணெய் கப்பல்… 16 பேர் மாயம்… தீவிர மீட்பு பணியில் ஐஎன்எஸ் தேஜ்…!

Published on: July 17, 2024
---Advertisement---

ஓமன் அருகே எண்ணெய் கப்பல் கவிழ்ந்த விபத்தில் 16 பேர் மாயமான நிலையில் ஐஎன்எஸ் தேஜஸ் கப்பல் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றது.

ஓமன் அருகே சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்கள் உள்ளிட்ட 16 பேர் மாயமாகி இருக்கின்றன. எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் மீட்புப்படையினர் கப்பலில் இருந்து மாயமான 16  பேரை தேடும் பயணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் ஓமன் அருகே கொமாரோ கொடியுடன் கூடிய கப்பல் கவிழ்த்ததை தொடர்ந்து இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் தேஜ், P-81 கடல் சார்பு கண்காணிப்பு விமானம் தேர்தல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள பணியாளர்களை ஈடுபடுத்தி உள்ளது.

இந்த இந்திய போர்க்கப்பல் ஜூலை 15ஆம் தேதி முதல் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், போர்க்கப்பல் ஜூலை 16ஆம் தேதி கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கரை கண்டுபிடித்துள்ளது.